தமிழகத்திற்கு வரும் ரூ.5 கோடி மதிப்பில் “Boat house” – குஷியில் பொதுமக்கள்!

0
தமிழகத்திற்கு வரும் ரூ.5 கோடி மதிப்பில்
தமிழகத்திற்கு வரும் ரூ.5 கோடி மதிப்பில் “Boat house” – குஷியில் பொதுமக்கள்!

தமிழகத்தில் தற்போது முதல் மிதவை படகு உணவகம் (Boathouse) பிரம்மாண்டமாக அமைப்பதற்கான பணிகள் தொடங்கியுள்ளது. அவை எங்கு அமைய உள்ளது என்பதை குறித்து இப்பதிவில் விரிவாக பார்ப்போம்.

மிதவை உணவகம்

தமிழகத்தில் தற்போது சுற்றுலா துறையை மேம்படுத்துவதற்கு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இதில் குறிப்பாக தற்போது தமிழகத்தை சேர்ந்தவர்கள் மிதவை படகு உணவகத்திற்கு செல்ல வேண்டுமெனில் பிற மாநிலங்களுக்கு பயணிக்க வேண்டியுள்ளது. இந்த நிலையை மாற்ற தமிழகத்திலேயே மிதவை உணவகம் (Boat House) அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

உலக அளவில் தொழில்நுட்ப துறையில் தமிழகம் 10% பங்களிப்பு – முதல்வர் பெருமிதம்!

தமிழகத்தின் முதல் மிதவை படகு உணவகத்தை (Boat House) சென்னையின் ECR சாலையில் முட்டுக்காட்டில் அமைக்கும் பணிகளை, அமைச்சர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்துள்ளார். இந்த மிதவை படகு உணவகம் ஆனது ரூ.5 கோடி மதிப்பில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட இருக்கிறது. இதற்கான பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதுவே தமிழகத்தில் முதல் மிதவை உணவாகும் என்பதால் பொதுமக்கள் இங்கு தங்களின் குடும்பத்தினருடன் விடுமுறை நாட்களில் அதிகமாக வருகை புரிவார்கள் என நம்பலாம்.

மிதவை படகு உணவகத்தில் இருக்கும் அட்டகாசமான வசதிகள்(Boat House Facilities):
  • இந்த முதல் மிதவை படகு உணவகம் 125 அடி நீளம் 25 அடி அகலத்தில் 2 அடுக்குகளை கொண்டிருக்கும். இதன் தரைதளம் முழுவதும் குளிர்சாதன வசதியை பெற்றிருக்கும்.
  • அத்துடன் இதில் சமையலறை, கழிவறை உள்ளிட்ட வசதிகள் இடம்பெற இருக்கிறது.
Exams Daily Mobile App Download

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!