இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு ரூ.1.65 லட்சம் ஊதியத்தில் BMRCL வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு ரூ.1.65 லட்சம் ஊதியத்தில் BMRCL வேலை - விண்ணப்பங்கள் வரவேற்பு!
இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு ரூ.1.65 லட்சம் ஊதியத்தில் BMRCL வேலை - விண்ணப்பங்கள் வரவேற்பு!
இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு ரூ.1.65 லட்சம் ஊதியத்தில் BMRCL வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு!

பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்பும் விதமாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க வரும் ஜன.17ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.1.65 லட்சம் ஊதியத்தில் வேலை:

நாடு முழுவதும் கொரோனா தொற்று குறைந்து வருவதை தொடர்ந்து பல்வேறு வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (BMRCL) நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்பும் விதமாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தமானது 3 ஆண்டுகளுக்கு வழங்கப்பட உள்ளது. இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விருப்பமும், தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியர்கள் 2021 இல் அதிகமாக Google Search பண்ணது இத பத்தி தான் – ஷாக்கிங் ரிப்போர்ட்!

இந்த பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் பணியாளர்கள் நிலையான மருத்துவ கொடுப்பனவு, குழு மருத்துவம் மற்றும் தனிநபர் விபத்து காப்பீடு, தேசிய ஓய்வூதிய திட்டத்திற்கான பங்களிப்பு உள்ளிட்ட அனைத்திற்கும் தகுதியுடையவர்களாக கருதப்படுவார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கல்வித்தகுதி, சம்பளம் மற்றும் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட விபரங்களை இந்த பதிவில் காணலாம்.

பணி: Various

காலியிடங்கள்: 125

சம்பளம்: பதவிக்கு தகுந்தாற்போல் வழங்கப்படும்.

கல்வித்தகுதி:

தலைமைப் பொறியாளர் பதவிக்கு சிவில் இன்ஜினியரிங் பிரிவில் BE அல்லது B.Tech முடித்து14 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

எக்ஸிகியூட்டிவ் இன்ஜினியரிங் பதவிக்கு சிவில் இன்ஜினீரிங் பிரிவில் BE அல்லது B.Tech முடித்து 12 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கி அதனை பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு ஸ்பீட் போஸ்ட் மூலம் அனுப்புமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விண்ணப்பத்துடன் உரிய சான்றிதழ்கள் அனைத்தையும் இணைத்து அனுப்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஸ்பீட் போஸ்ட் அல்லது கொரியர் அனுப்ப வேண்டிய முகவரி General Manager (HR), Bangalore Metro Rail Corporation Limited, 3rd Floor, BMTC Complex, K.H. Road, Shanthi Nagar, Bengaluru 560027. இந்த தபால் வரும் ஜன.17ம் தேதி மாலை 4 மணிக்குள் சென்று சேரும் வகையில் அனுப்புமாறு கூறப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!