பாக்கியாவிடம் வசமாக சிக்கிய கோபி – அடுத்து நடக்கப்போகும் ட்விஸ்ட்!

0
பாக்கியாவிடம் வசமாக சிக்கிய கோபி - அடுத்து நடக்கப்போகும் ட்விஸ்ட்!
பாக்கியாவிடம் வசமாக சிக்கிய கோபி - அடுத்து நடக்கப்போகும் ட்விஸ்ட்!
பாக்கியாவிடம் வசமாக சிக்கிய கோபி – அடுத்து நடக்கப்போகும் ட்விஸ்ட்!

பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது சுவாரஸ்யத்துக்கு பஞ்சமில்லாத வகையில் நாளுக்கு நாள் பல திருப்பங்களுடனும், எதிர்பார்ப்புகளுடனும் சீரியல் கதையில் மாற்றங்கள் காட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்றைய எபிசோடில் மண்டையில் இருக்கும் கொண்டைய மறந்து ராதிகாவுடன் இருக்கும் கோபியின் லீலைகள் பாக்கியாவுக்கு தெரிய வருகிறது.

பாக்கியலட்சுமி:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரில் இல்லத்தரசி பாக்கியா ஒரு அம்மாவாக தனது மகள் இனியாவை கண்டிக்க, அவளோ எனக்கு பிரைவசி வேண்டும் என சொன்னதற்க்கு சப்போர்ட் செய்யும் வகையில் கோபி தன் வாயை கொடுத்து மாட்டிய நிகழ்வை பார்த்திருப்போம். இதை தொடர்ந்து இன்றைய எபிசோட்டில் இனியாவுக்கு வக்காளத்து வாங்கிய கோபி குடும்பத்தினரின் வற்புறுத்தலால் தற்போது கோபி தன்னுடைய மனைவியுடன் ஒரே ரூமில் தங்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

இவ்ளோ நாளாக பொண்டாட்டி கூட இல்லாம, இளமை காதலியுடன் விடிஞ்சது முதல் அடைஞ்சது வர ஒரே குஷியாக இருந்த கோபி தற்போது பாக்கியா, கோபியுடன் இருக்க நேரும் சூழ்நிலையை நினைத்து வருந்துகிறான். இனி எப்படி ராதிகாவுடன் பேசுவது என தெரியாமல் வயசு போன காலத்தில் காதலுக்காக உருகுகிறார் கோபி. ஆனாலும் காதல் கண்ணை மறைப்பது போல் கோபி தன்னுடன் பாக்கியா இருப்பதையே மறந்து இரவு முழுவதும் தூங்காமல் விடியவிடிய ராதிகாவுடன் கடலை போடுகிறார்.

மேலும், பாக்கியா குளிக்க சென்ற போது ரூமில் அவள் இல்லை என நினைத்துக்கொண்டு,கோபி வழக்கம் போல் காலை எழுந்தவுடன் ராதிகாவுக்கு போன் செய்து குட் மார்னிங் சொல்லி கொஞ்சி கொஞ்சி பேசுவதை திடீரென்று பாத்ரூமிலிருந்து வெளியே வந்த பாக்யா கேட்டு விடுகிறாள். ஆரம்பத்தில் செல்வி அக்கா கோபியை குறித்து சொன்னதை நினைத்து சந்தேகத்தில் இருந்த பாக்கியாவுக்கு தற்போது கோபியின் நடவடிக்கை மாற்றங்களும் சேர்ந்து சந்தேகத்தை அதிகரிக்க வைத்துள்ளது. ‘பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்’ என்பதற்கேற்ப கூடவே தங்கியிருக்கும் பாக்யாவிற்கு கூடிய விரைவில் உண்மை தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!