தமிழக பள்ளிகளில் மாணவர் சேர்க்கை – பெயருடன் கூடிய பிறப்பு சான்றிதழ் அவசியம்!!!

0
தமிழக பள்ளிகளில் மாணவர் சேர்க்கை - பெயருடன் கூடிய பிறப்பு சான்றிதழ் அவசியம்!!!
தமிழக பள்ளிகளில் மாணவர் சேர்க்கை - பெயருடன் கூடிய பிறப்பு சான்றிதழ் அவசியம்!!!
தமிழக பள்ளிகளில் மாணவர் சேர்க்கை – பெயருடன் கூடிய பிறப்பு சான்றிதழ் அவசியம்!!!
தமிழகத்தில் வரும் காலங்களில் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு பெயருடன் கூடிய பிறப்பு பிறப்பு சான்றிதழை வழங்கினால் மட்டுமே அனுமதிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

பிறப்பு சான்றிதழ்:

குழந்தை பிறந்ததும் தற்போதைய காலங்களில் மருத்துவமனையில் இருந்தே குழந்தைக்கான பிறப்பு சான்றிதழ் பதிவு செய்யப்படுகிறது. நமது விவரங்களை நாம் பதிவு செய்த இரண்டு மாதங்களில் மாநகராட்சியில் இருந்து பிறப்பு சான்றிதழை வழங்குவார்கள். குழந்தையின் பெயரை தேர்வு செய்யாத பெற்றோர்கள் ஒரு வருடத்திற்குள் மாநகராட்சி அலுவலகத்தில் சென்று குழந்தையின் பெயரை பதிவு செய்து கொள்ளலாம்.

முழு நேர கல்லூரிக்கு இணையாக 25 தொலைநிலை படிப்புகள் – காமராஜ் பல்கலை திட்டம்!!

சுற்றறிக்கை:

பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை மாணவர்களின் பிறப்பு சான்றிதழ் மூலம் நடத்தப்படும். இந்நிலையில் பள்ளிக்கல்வி இயக்குனர் அவர்கள் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். குழந்தையின் பெயரை பிறப்பு பதிவு செய்த நாளில் இருந்து 12 மாதங்களுக்குள் பதிவு செய்து கொள்ளும் முறை வழக்கத்தில் உள்ளது. மேலும், கடந்த 2000 ஆம் ஆண்டு ஜனவரி 1ம் தேதிக்கு முன்னர் பிறந்தவர்கள் வரும் 2024ம் ஆண்டு வரை இலவசமாக பதிவு செய்து கொள்ளலாம்.

TN Job “FB  Group” Join Now

குழந்தையின் பெயரை ஒரு முறை பதிவு செய்த பிறகு மறுபடியும் மற்றம் செய்ய முடியாது. ஒரு வருட காலத்திற்குள் பெயரை பதிவு செய்ய தவறியவர்கள் கால தாமத கட்டணம் செலுத்தி பெயரை பதிவு செய்து கொள்ளலாம். மேலும், பள்ளிகளில் மாணவர் சேர்க்கையின் போது பெயருடன் கூடிய பிறப்பு சான்றிதழ் வழங்குவது கட்டாயம் என்றும் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!