BiggBoss சீசன் 6ல் இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர் இவர் தான் – வெளியான வாக்கு பட்டியல்!

0
BiggBoss சீசன் 6ல் இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர் இவர் தான் - வெளியான வாக்கு பட்டியல்!
BiggBoss சீசன் 6ல் இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர் இவர் தான் - வெளியான வாக்கு பட்டியல்!
BiggBoss சீசன் 6ல் இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர் இவர் தான் – வெளியான வாக்கு பட்டியல்!

விஜய் டிவி “பிக்பாஸ் சீசன் 6” நிகழ்ச்சி தொடங்கி இரண்டாவது வாரம் வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கும் நிலையில், இந்த வாரம் நாமினேட் செய்யப்பட்டவர்களில், மக்களின் குறைவான வாக்குகள் பெற்று வெளியேற இருக்கும் போட்டியாளர் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.

பிக்பாஸ் எலிமினேஷன்:

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி ஒரு வாரம் மட்டுமே முடிவடைந்த நிலையில், முதல்வாரம் இருந்த உற்சாகம் இந்த வாரம் போட்டியாளர்களிடம் இல்லை. இந்த வார தலைவர் போட்டியில் கடுமையாக போராடி வெற்றி பெற்ற ஜிபி முத்து கூட, வீட்டு நியாபகம் வந்ததால் அவர் நிகழ்ச்சியை விட்டு வெளியேற வேண்டும் என நேற்றைய எபிசோடில் பிக்பாஸிடம் பேசினார். ஆனால் பிக்பாஸ் அவருக்கு ஆறுதல் சொல்லி அனுப்பி வைத்தார். அதன் பின் டான்ஸ் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

அது மட்டுமில்லாமல் கதை சொல்லும் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் போட்டியாளர்கள் கதை சொல்ல, சக போட்டியாளர்கள் 3 பஸர் அடிக்க வேண்டும். 60 வினாடிக்குள் 3 பஸர் அடித்துவிட்டால் கதை நிராகரிக்கப்பட்டு போட்டியாளர்கள் நாமினேஷன் செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு சிலர் முழுமையாக கதை சொல்லியும் பிற போட்டியாளர்கள் பஸர் அடிக்காமல் இருந்தனர். ஆனால் பலர் பேச தொடங்கியதுமே பஸர் அடிக்கப்பட்டது. அதனால் போட்டியாளர்களில் பலர் வருத்தத்துடன் இருக்கின்றனர்.

சமையல் போட்டிக்கு போக வேண்டும் என பிடிவாதம் பிடிக்கும் முல்லை, வீட்டிற்கு வந்த மூர்த்தி குடும்பம் – இன்றைய எபிசோட்!

Exams Daily Mobile App Download

இந்நிலையில் இந்த வார நிகழ்ச்சியில் ரட்சிதா, விக்ரமன், ஆயிஷா, குயின்சி, அசிம், நிவாஷினி, ஷெரினா, ஷிவின், ராம், தனலட்சுமி, விஜே மஹேஸ்வரி, சாந்தி ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கான வாக்கு பதிவு சென்று கொண்டிருக்கும் நிலையில், குறைவான வாக்குகளுடன் இந்த வாரம் எலிமினேட் ஆக வாய்ப்புள்ள போட்டியாளர் குறித்த விவரம் வெளியாகி இருக்கிறது. அதில் குறைவான வாக்குகளுடன் சாந்தி மாஸ்டர் கடைசி இடத்திலும், அவருக்கு முன்னதாக விஜே மகாலக்ஷ்மி இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. அதனால் இந்த வாரம் சாந்தி மாஸ்டர் வெளியேற அதிக வாய்ப்புள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!