விஜய் டிவி ‘பிக் பாஸ்’ வீட்டில் இருந்து வெளியேறிய வருண் வெளியிட்ட வீடியோ – ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவி ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் மக்களின் குறைவான வாக்குகள் பெற்று வெளியேறிய வருண், முதன்முறையாக பிக் பாஸ் வீட்டில் நடந்த சண்டைகள் பற்றி பேசி இருக்கிறார்.
பிக்பாஸ் வருண்:
விஜய் டிவியில் ஒரு மாறுபட்ட ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் தொடங்கப்பட்டு தற்போது 90 நாட்களை நெருங்கி உள்ளது. மற்ற சீசன்களை போல இல்லாமல் இந்த சீசனில் போட்டியாளர்கள் நண்பர்களாக இருந்தாலும் விளையாட்டு என்று வந்தால் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்காமல் விளையாடி வருகின்றனர். பிக் பாஸ் வீட்டில் 50 நாட்கள் வரை இருந்து வெளியேறியவர் ஜக்கி. அவர் நிகழ்ச்சியை விட்டு வெளியேறினாலும் போட்டியாளர்களின் குடும்பத்தை சந்தித்து பேசினார்.
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கண்ணன் & விஜே தீபிகா சேர்ந்து வெளியிட்ட வீடியோ – ரசிகர்கள் பாராட்டு!
அதன் பின் வாராவாரம் வெளியேறும் போட்டியாளர்களை சந்தித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார். அந்த வகையில் சென்ற வாரம் வருண் மற்றும் அக்ஷரா என இருவரும் வெளியேறி இருக்கின்றனர். அவர்களில் வருணை சந்தித்த ஜக்கி பிக் பாஸ் வீட்டில் அவர்கள் அடித்த லூட்டிகளை பற்றி பேசி இருக்கிறார். பின் பிக் பாஸ் வீட்டில் வருண் எனக்கு சண்டை கற்றுக் கொடுத்தான், அதை எல்லாம் காட்டவில்லை என சொல்லி இருக்கிறார். மேலும் வருணுடன் சேர்ந்து ஆல்பம் சாங் ஒன்று ரிலீஸ் செய்ய வேண்டும் என ரசிகரின் கேள்விக்கு சரி என பதில் அளித்து இருக்கிறார்.
45 நாள் நிகழ்ச்சியாக OTT Bigg Boss? போட்டியாளர்கள் யார் தெரியுமா? ரசிகர்களுக்கு ஜாக்பாட்!
தொடர்ந்து பேசிய அவர் பிக் பாஸ் வீட்டில் எங்களுக்கு பொழுதுபோக்கே சண்டைகள் தான். அங்கே டிவியும் இருக்காது படம் பார்க்கவே முடியாது. அதனால் யாராவது சண்டை போட்டால் நாங்க பார்த்துக் கொண்டிருப்போம் என சொல்லி இருக்கிறார். பாவ்னி கேப்டனாக இருக்கும் போது நிறைய சண்டைகள் நடக்கும். அதை எல்லாம் டிவியில் காட்டவில்லை என வருண் சொல்லி இருக்கிறார்.