‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் இருந்து உடல்நிலை குறைபாட்டால் விலகும் பிரபலம் – ரசிகர்கள் கவலை!

0
'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் இருந்து உடல்நிலை குறைபாட்டால் விலகும் பிரபலம் - ரசிகர்கள் கவலை!
'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் இருந்து உடல்நிலை குறைபாட்டால் விலகும் பிரபலம் - ரசிகர்கள் கவலை!
‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் இருந்து உடல்நிலை குறைபாட்டால் விலகும் பிரபலம் – ரசிகர்கள் கவலை!

தற்போது மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் ஷோ தான் பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்று விளையாடி வரும் ஒருவர் தனது உடல்நல பிரச்சனையின் காரணமாக போட்டியில் இருந்து விலக இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சி:

ரசிகர்கள் தற்போதைய காலகட்டத்தில் திரைப்படங்கள் மற்றும் சீரியல்களை அதிகமாக பார்ப்பதை விட ரியாலிட்டி ஷோக்களுக்கு தான் அதிகமாக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். இதனால் தனியார் தொலைக்காட்சிகளும் ரசிகர்கள் விரும்பும் வகையில் அது போன்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை தான் ஒளிபரப்பி வருகிறது. அதில் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது. 100 நாட்கள் 15 முதல் 20 போட்டியாளர்கள் ஒரு வீட்டிற்குள் இருக்க வேண்டும்.

‘பாரதி கண்ணம்மா’ முதல் ‘ரோஜா’ சீரியல் வரை – ப்ரோமோக்கள் மீதான ரசிகர்களின் டாப் கமெண்ட்ஸ்!

அங்கு பிக் பாஸ் கூறும் டாஸ்குகளை செய்து போட்டியில் விளையாட வேண்டும். ஒவ்வொரு வாரமும் நாமினேட் செய்யப்படும் நபர்கள் மக்களின் வாக்களிப்பின் காரணமாக காப்பாற்றப்படுவார். தற்போது ஹிந்தியில் இந்த நிகழ்ச்சி 15வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியினை நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது இந்த நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு என்ட்ரியாக கலந்து கொண்டவர் தான் நடிகர் ராகேஷ் பாபட். இவர் ஏற்கனவே கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘பிக் பாஸ் OTT’ என்ற நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டுள்ளார்.

Vijay TV Bigg Boss Promo | இமான் அண்ணாச்சி, ராஜுவிற்கு நூதன தண்டனை! ரசிகர்கள் அதிர்ச்சி!

அந்த நிகழ்ச்சியில் இருந்த போது அவரது சக போட்டியாளரான ஷமிதா ஷெட்டி என்பவரை காதலித்து வந்தார். தற்போது இருவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒன்றாக விளையாடி வருகின்றனர். இந்த நிலையில், நடிகர் ராகேஷ் சீறுநீரகத்தில் ஏற்பட்டுள்ள கல் அடைப்பின் காரணமாக போட்டியில் இருந்து விலக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!