‘பாரதி கண்ணம்மா’ முதல் ‘ரோஜா’ சீரியல் வரை – ப்ரோமோக்கள் மீதான ரசிகர்களின் டாப் கமெண்ட்ஸ்!

0
'பாரதி கண்ணம்மா' முதல் 'ரோஜா' சீரியல் வரை - ப்ரோமோக்கள் மீதான ரசிகர்களின் டாப் கமெண்ட்ஸ்!
'பாரதி கண்ணம்மா' முதல் 'ரோஜா' சீரியல் வரை - ப்ரோமோக்கள் மீதான ரசிகர்களின் டாப் கமெண்ட்ஸ்!
‘பாரதி கண்ணம்மா’ முதல் ‘ரோஜா’ சீரியல் வரை – ப்ரோமோக்கள் மீதான ரசிகர்களின் டாப் கமெண்ட்ஸ்!

தமிழ் டிவி சேனல்களில் இன்று ஒளிபரப்பாக இருக்கும் சீரியல்களுக்கான ப்ரோமோக்களும், அதன் மீதான ரசிகர்களின் விமர்சனங்களை குறித்தும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் மீதான எதிர்பார்ப்பு அதிகம் இருப்பதாக தெரிகிறது.

சீரியல் ப்ரோமோ

இன்றைய காலத்து ரசிகர்களின் நிரந்தர பொழுதுபோக்காக மாறி இருக்கும் சீரியல்கள் அதிகப்படியான ரசிகர்களை கவர்ந்து வைத்திருக்கிறது. குறிப்பாக டிவி சேனல்களில் பிரேம் நேரத்தில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு மக்கள் அதிக முக்கியத்துவம் கொடுப்பது வழக்கம். அந்த வகையில் ஒவ்வொரு நாளுக்கான கதையில் சில ஏற்ற இறக்கங்களை சந்தித்து வந்தாலும் குறிப்பிட்ட சில சீரியல்கள் மக்களின் பேவரைட் ஆக இருந்து வருகிறது.

Vijay TV Bigg Boss Promo | இமான் அண்ணாச்சி, ராஜுவிற்கு நூதன தண்டனை! ரசிகர்கள் அதிர்ச்சி!

அதுவும் பிரைம் நேர சீரியல்கள் மட்டும் தான் TRP ரேட்டிங்கில் முதன்மையான இடங்களையும் பிடித்து வருகிறது. அந்த வகையில் இன்றைய நாளுக்கான ப்ரோமோக்கள் மூலம் மக்கள் மனதை கவர்ந்துள்ள சில சீரியல்களையும், அதன் ப்ரோமோக்கள் மீதான ரசிகர்களின் விமர்சனங்களையும் இப்பதிவில் காணலாம். அதில் முதலாவதாக விஜய் டிவியின் ‘பாரதி கண்ணம்மா’ ப்ரோமோவுக்கு பாரதிக்கு பொட்டுல அடிச்ச மாதிரி சொன்னீங்க சௌந்தர்யா, சூப்பர்.

பாரதி என்ன செய்வார் என்பதை பார்க்க ஆர்வமாக இருக்கிறது, பாரதி நீ தான் தைரியமான ஆள் ஆச்சே இப்போ போய் வெண்பாவை காப்பாத்து, போதும் சார் சீக்கிரம் DNA டெஸ்ட் எடுங்க இல்ல உண்மையை சொல்லுங்க, இந்த ஒரு உண்மையை வச்சிக்கிட்டு எத்தனை நாள் தான் போகுமோ..முடியல என பதிவிட்டுள்ளனர். அடுத்ததாக ‘பாக்கியலட்சுமி’ சீரியலின் ப்ரோமோவுக்கு கோபி ஆடு தானா போய் தலையை கொடுக்குது.

இப்போ ராதிகா போன் பண்ணி பாக்கியகிட்ட கேட்டா எப்படி சமாளிப்பீங்க கோபி, தலைவன் கோபி எல்லாத்துக்கும் ஒரு ஐடியா வச்சிருப்பாரு, பாவம் பாக்கியா அவங்கள இப்படி ஏமாத்துறிங்களே கோபி என கோபி மீது பல்வேறு விமர்சனங்கள் எழுப்பப்பட்டிருக்கிறது. தொடர்ந்து ‘ராஜா ராணி 2’ சீரியலுக்கு ஒருவழியா பிரச்சனை ஆப்லைனுக்கு போயிட்டு ஹேப்பி மோட்க்கு வந்துருக்கு இதுக்கும் காரணம் சந்தியா தான், இப்படியே சந்தோஷமா இருந்தா நல்லாருக்கும் என பதிவிட்டுள்ளனர்.

ரோஜா’ சீரியலில் வரப்போகும் அடுத்தடுத்த திருப்பங்கள் – அர்ஜுன் & ரோஜா ரசிகர்கள் குஷி!

அடுத்ததாக ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலின் ப்ரோமோவுக்கு, பாத்து பத்திரமா போய்ட்டு வாங்க மீனா வம்புல மாடிக்காதீங்க, மீனா எதார்த்தமான நடிப்பு, அடுத்த வாரம் முழுக்க கோவில் எபிசோடா.. நடத்துங்க என்று கருத்துக்களை தெரிவித்துள்ளனர். தொடர்ந்து ‘ரோஜா’ சீரியல் ப்ரோமோவுக்கு டைகருக்கு இப்போ தான் கொஞ்சம் கொஞ்சமா அறிவு வளருது போல, மாணிக்கம்.. அவர்களுக்கு ரோஜா தன் மகள் என்று தெரியாவிட்டாலும் பரவாயில்லை.

ரோஜா மீது கொஞ்சம் கருணை வந்தால் போதும், 2 வாரத்துல 1000வது எபிசோடு வர போகுது ஆனால் கதை மட்டும் அப்படியே இருக்கு, கதையை கொஞ்சம் வேகமா கொண்டு போங்க டைரக்டர் சார் என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த கதைகளை வைத்து பார்க்கையில் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலுக்கு அதிக எதிர்பார்ப்பு இருப்பது தெரிகிறது. ஏனென்றால் வெண்பாவை பெயிலில் எடுக்க முயற்சிக்கும் பாரதிக்கு, சௌந்தர்யா செக் வைக்க கதையில் அதிரடி காட்சிகள் அரங்கேற இருப்பதாக தெரிகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!