விஜய் டிவி சீரியலில் களமிறங்கும் ‘பிக்பாஸ்’ பிரபலம் – விரைவில் ‘ஈரமான ரோஜாவே’ 2ம் பாகம் ஒளிபரப்பு!

0
விஜய் டிவி சீரியலில் களமிறங்கும் 'பிக்பாஸ்' பிரபலம் - விரைவில் 'ஈரமான ரோஜாவே' 2ம் பாகம் ஒளிபரப்பு!
விஜய் டிவி சீரியலில் களமிறங்கும் 'பிக்பாஸ்' பிரபலம் - விரைவில் 'ஈரமான ரோஜாவே' 2ம் பாகம் ஒளிபரப்பு!
விஜய் டிவி சீரியலில் களமிறங்கும் ‘பிக்பாஸ்’ பிரபலம் – விரைவில் ‘ஈரமான ரோஜாவே’ 2ம் பாகம் ஒளிபரப்பு!

விஜய் டிவியில் கடந்த சில மாதங்களுக்கு முன்னாக முடிவடைந்த ‘ஈரமான ரோஜாவே’ சீரியலின் 2ம் பாகம் தயாரிக்கப்பட்டு வரும் நிலையில், இத்தொடரில் முதன்மை கதாப்பாத்திரத்தில் ‘பிக்பாஸ்’ புகழ் கேப்ரியல்லா நடிக்க இருப்பதாக தகவல்கள் பெறப்பட்டுள்ளது.

புதிய சீரியல்

கடந்த சில மாதங்களாக ஒவ்வொரு முன்னணி டிவி சேனல்களிலும் புத்தம் புதிய சீரியல்களின் அணிவகுப்பு ஆரம்பமாகி இருக்கிறது. அந்த வகையில் சீரியல்களுக்கு பெயர் போன விஜய், சன், ஜீ தமிழ், கலர்ஸ் ஆகிய டிவி சேனல்கள் பல புதிய சீரியல்களை அறிமுகம் செய்து வருகின்றன. குறிப்பாக இந்த டிவி சேனல்களில் புதிதாக ஒளிபரப்பப்பட்டு வரும் அனைத்து சீரியல்களுக்கும் மக்களிடம் இருந்து ஏகப்பட்ட வரவேற்புகள் கிடைத்து வருகிறது. இந்த வரிசையில் அடுத்தபடியாக விஜய் டிவி ஒரு புத்தம் புதிய சீரியலை களமிறக்க இருக்கிறது.

எழில் மீதும் வெறுப்பை காட்டும் அமிர்தா, ஒரே நாளில் பிரபலமானதை நினைத்து சந்தோசப்படும் பாக்கியா – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

அதாவது விஜய் டிவியில் கடந்த 2018ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை சுமார் 808 எபிசோடுகளாக ஒளிபரப்பான ‘ஈரமான ரோஜாவே’ என்கிற சூப்பர் ஹிட் சீரியலின் 2ம் பாகத்தை எடுக்கும் முயற்சியில் விஜய் டிவி ஈடுபட்டு வருகிறதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த ‘ஈரமான ரோஜாவே’ சீரியலின் முதல் பாகத்தில் நடிகர் திரவியம் மற்றும் பவித்ரா இருவரும் லீட் ரோலில் நடிக்க இவர்களுடன் ஷ்யாம், காயத்ரி உள்ளிட்ட பல சின்னத்திரை நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

தனத்தை தவறாக நினைக்கும் மீனா, கண்ணனை மோசமாக அடித்து கீழே தள்ளும் ரௌடிகள் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

இப்போது வெளிவந்துள்ள புதிய தகவலின் படி, ‘ஈரமான ரோஜாவே’ சீரியலின் 2ம் பாகத்தில் ‘பிக்பாஸ்’ சீசன் 4 நிகழ்ச்சியின் போட்டியாளரும், விஜய் டிவி ரசிகர்களுக்கு நன்கு பரீட்சையபட்ட நடிகையுமான கேப்ரியல்லா லீட் ரோலில் நடிக்க இருக்கிறார். இதற்கான ஆரம்ப கட்ட படப்பிடிப்பு வேலைகள் தற்போது துவங்கி இருப்பதாக சொல்லப்பட்டு வரும் நிலையில், இத்தொடரில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் குறித்த விவரங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. என்றாலும் முதல் பாகத்தை போலவே ‘ஈரமான ரோஜாவே’ சீசன் 2ம் மக்களிடம் வரவேற்புகளை பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!