தனத்தை தவறாக நினைக்கும் மீனா, கண்ணனை மோசமாக அடித்து கீழே தள்ளும் ரௌடிகள் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

0
தனத்தை தவறாக நினைக்கும் மீனா, கண்ணனை மோசமாக அடித்து கிழே தள்ளும் ரௌடிகள் - இன்றைய
தனத்தை தவறாக நினைக்கும் மீனா, கண்ணனை மோசமாக அடித்து கிழே தள்ளும் ரௌடிகள் - இன்றைய "பாண்டியன் ஸ்டோர்ஸ்" எபிசோட்!
தனத்தை தவறாக நினைக்கும் மீனா, கண்ணனை மோசமாக அடித்து கீழே தள்ளும் ரௌடிகள் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், தனம் அம்மா வீட்டிற்கு செல்ல, மீனா கயல் பிறந்தநாள் அதுவும் சென்றுவிட்டார் என தப்பாக நினைத்து கொள்கிறார். பின் கடை பையன் கண்ணனை அடியாட்கள் வைத்து அடிக்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில், தனம் 3 நாட்கள் எப்படி பிரிந்து இருக்க போகிறேன் என மூர்த்தியிடம் கேட்கிறார். ஜெகா முல்லையிடம் துணி எல்லாம் எடுத்து வைத்துவிட்டியா என கேட்கிறார். எல்லாம் வைத்துவிட்டேன் என சொல்ல, மீனாவிடம் சொல்லவில்லை என சொல்கிறார். அவளிடம் நான் சொல்லிக் கொள்கிறேன் என மூர்த்தி சொல்ல, தனம் கிளம்புகிறார். தனம் அம்மா வீட்டில் துறு துறுவென இருக்க கஸ்தூரி அதையெல்லாம் பார்த்து இந்த அம்மாவிற்கு நெஞ்சுவலி என சொன்னால் நம்புகிற மாதிரியா இருக்கு என நினைக்கிறார்.

கண்ணம்மா வாழ்க்கையை விட்டு செல்ல பேரம் பேசும் பாரதி, வெண்பாவிடம் பொய் சொல்லும் சாந்தி – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

பின் அவர் காபி குடிக்க எனக்கு எங்கே என தனத்தின் அம்மா கேட்கிறார். நீங்க தான் தனம் வராமல் எதுவும் சாப்பிடமாட்டேன் என சொன்னீங்க என்று கேட்க அதனால டீ குடிப்பேன் என சொல்கிறார். தனம் அப்போது வர அவர் ஓடி சென்று குழந்தைக்கு சுற்றி போடுகிறார். தனம் அம்மாவை பார்த்து முடியாமல் போனவர் மாதிரி இல்லையே என குழப்பத்தில் இருக்கிறார். உனக்கு உடம்பு சரியாகிவிட்டதா என கேட்க, அம்மா ரொம்ப வலியால் துடித்தார்கள் என சொல்ல ஆமாம் தனம் உன்னை பார்த்ததும் எல்லாம் சரியாகிவிடும் என சொல்கிறார்.

மீனா எழுந்து வர ரொம்ப நேரம் துங்கிடீங்க போல என கேட்கிறார். அப்போது தனம் அக்கா எங்கே என கேட்க, அவங்க அம்மாவிற்கு உடம்பு சரியில்லை அதனால் அவங்க அம்மா வீட்டிற்கு போயிருக்காங்க வர இன்னும் 3 நாட்கள் ஆகும் என சொல்கிறார் முல்லை. என்னிடம் சொல்லிவிட்டு போகவில்லை என மீனா கோவப்படுகிறார். கயல் பிறந்தநாளைக்கு இருக்க கூடாது என நினைத்து தான் சென்றுவிட்டார் என சொல்கிறார். முல்லை அக்கா அப்படி எல்லாம் நினைக்கமாட்டார் நீங்க ஏன் அக்காவை நம்பாமல் இருக்கீங்க, அக்கா கண்டிப்பா கயல் பிறந்தநாளைக்கு வந்துருவாங்க என சொல்கிறார்.

2025 ஆம் ஆண்டு முதல் இருசக்கர வாகனங்களுக்கு தடை – அரசு அதிரடி அறிவிப்பு!

முல்லை கயலை வாங்கி கொண்டு போக, அக்கா கயல் பிறந்தநாளைக்கு வராமல் இருக்கட்டும் அப்போது இருக்கு என மீனா நினைக்கிறார். கடை பையன் ரௌடிகளிடம் சொல்லி கண்ணனை அடிக்க திட்டமிடுகிறார். அவனுடைய அண்ணன் தான் என்னை அடித்தார்கள். இவனை அடித்தால் அவங்களுக்கு வலிக்கும் என சொல்ல, அவன் பின்னாடி சென்று அவன் கதையை முடிப்போம் என சொல்கிறார். பின் அவர்கள் கண்ணனை பிடிக்க கண்ணன் யாரு என்று தெரியாமல் இருக்கிறார்.

நீங்க என்னை அடிப்பது என் அண்ணன்களுக்கு தெரிந்தால் உங்களை சும்மா விடமாட்டார்கள் என சொல்ல, அனைவரும் பயங்கரமாக அடிக்கின்றனர். கண்ணன் ரத்தம் சொட்ட சொட்ட கிழே போட்டு சென்றுவிடுகிறார்கள். ஐஸ்வர்யா கண்ணன் இன்னும் வரவில்லை என நினைத்து காத்துக் கொண்டிருக்க, கண்ணன் ரத்த வெள்ளத்தில் மயக்கமாக கிடக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here