Vijay TV Bigg Boss 5 Promo | பாவ்னிக்கு வலை விரித்த அமீர், கடுப்பான பிரியங்கா!
விஜய் டிவி “பிக்பாஸ் சீசன் 5” நிகழ்ச்சியில் அமீர் பாவ்னி உடன் கொஞ்சி பேசுவதால் பிரியங்கா கடுப்பாவது போன்ற முதல் ப்ரோமோ வெளியாகி உள்ளது.
பிக் பாஸ் ப்ரோமோ:
பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு தற்போது 65 நாட்கள் ஆகிறது. இந்த சீசன் 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய நிலையில் 9 பேர் வெளியாகி உள்ளனர். 2 வைல்ட் கார்ட் என்ட்ரி அனுப்பப்பட்ட நிலையில் அவர்களுடன் சேர்த்து மொத்தம் 11 பேர் வீட்டிற்குள் இருக்கின்றனர். இமான், தாமரை, வருண், சிபி, ராஜு, சஞ்சீவ், பிரியங்கா, பாவ்னி, அமீர், நிரூப், அக்ஷரா ஆகியோர் போட்டி போட்டு விளையாடி வருகின்றனர். அவர்களில் இந்த வாரம் நாணயத்தை பயன்படுத்தி பாவ்னி தலைவராக இருக்கிறார்.
குழந்தை பிறந்த பின் மீண்டும் நடிக்க துவங்கிய ‘பாரதி கண்ணம்மா’ வில்லி பரினா – வைரல் வீடியோ!
மேலும் நாமினேஷன் ப்ராசஸ் முடிவடைந்து போட்டியாளர்கள் பெயர் அறிவிக்கப்பட்டது. ஆனால் நிரூப் தனது நாணயத்தை பயன்படுத்தி நாமினேஷனில் இருந்து விலக நினைத்தார். அவர் சஞ்சீவை நாமினேட் செய்ய முன் வந்தார். அதனால் இருவருக்கும் ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதில் சஞ்சீவ் வெற்றி பெற்றதால் தொடர்ந்து நிரூப் நாமினேஷனுக்கு வந்தார். இந்நிலையில் இன்றைய எபிசோட் குறித்த ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் அமீர் பாவ்னி சிரித்தால் அழகாக இருப்பதாக சொல்கிறார்.
நான் உங்களுடைய ரசிகர் என சொன்ன போது சிரித்தீர்கள் அல்லவா அது நன்றாக இருந்தது என சொல்ல, அதை பார்த்த பிரியங்கா என்னால் முடியவில்லை என சொல்கிறார். நீங்க செய்வது எல்லாமே கியூட்டாக இருக்கிறது என சொல்ல, இந்த மாதிரி நினைப்பு எப்போது இருந்து என பாவ்னி கேட்கிறார். அதை பார்த்த பிரியங்கா நீங்க அவங்க க்ரஷ் தான இல்லை நீங்க இவங்க க்ரஷ் தான என கேட்கிறார். எனக்கு வெட்கமாக வருகிறது என பாவ்னி சொல்ல, இதெல்லாம் எல்லாம் நான் பார்க்க வேண்டியதாக இருக்கிறது என பிரியங்கா கடுப்பாகிறார்.