அடிபட்ட காலுடன் வீட்டிற்கு வரும் சிவகாமி, சல்மா உடன் சேர்ந்து சந்தியாவை பழி வாங்க திட்டமிடும் அர்ச்சனா – இன்றைய “ராஜா ராணி 2” எபிசோட்!

0
அடிபட்ட காலுடன் வீட்டிற்கு வரும் சிவகாமி, சல்மா உடன் சேர்ந்து சந்தியாவை பழி வாங்க திட்டமிடும் அர்ச்சனா - இன்றைய
அடிபட்ட காலுடன் வீட்டிற்கு வரும் சிவகாமி, சல்மா உடன் சேர்ந்து சந்தியாவை பழி வாங்க திட்டமிடும் அர்ச்சனா - இன்றைய "ராஜா ராணி 2" எபிசோட்!
அடிபட்ட காலுடன் வீட்டிற்கு வரும் சிவகாமி, சல்மா உடன் சேர்ந்து சந்தியாவை பழி வாங்க திட்டமிடும் அர்ச்சனா – இன்றைய “ராஜா ராணி 2” எபிசோட்!

விஜய் டிவி “ராஜா ராணி 2” சீரியலில், சரவணன் குடும்பத்தினரை வர வைத்ததை நினைத்து சந்தியாவிடம் தனது மகிழ்ச்சியை தெரிவிக்கிறார். பின் அர்ச்சனா சந்தியாவிற்கு எதிராக இருப்பதை தெரிந்து கொண்டு சல்மா அவருடன் இணைகிறார்.

ராஜா ராணி 2:

இன்று “ராஜா ராணி 2” சீரியலில் சிவகாமி கோவிலில் காலில் அடிபட்டு இருக்க, அதோடு வீட்டிற்கு வருகிறார். அப்போது மயில் அதை பார்த்து என்ன நடந்தது என கேட்கிறார். அதெல்லாம் ஒன்றுமில்லை என சிவகாமி சொல்லி மயில் காலில் மருந்து போட்டு விடுகிறார். மறுபக்கம் சரவணன் சந்தியா செய்ததை நினைத்து சந்தோஷத்தில் அவரை தூக்கி சுற்றுகிறார். என் குடும்பத்திற்கு இப்படி செய்ய வேண்டும் என நீண்ட நாட்களாக எனக்கு ஆசை இருந்தது.ஆதி பார்வதி பாத்திங்களா எவ்வளவு சந்தோசமாக இருக்காங்க, நம்ம ஊரில் இப்படி எதுவும் இல்லை என சொல்கிறார்.

குழந்தை பிறந்த பின் மீண்டும் நடிக்க துவங்கிய ‘பாரதி கண்ணம்மா’ வில்லி பரினா – வைரல் வீடியோ!

நீங்க வருத்தப்பட்டது எனக்கு தெரிந்தது, வருத்தத்துடன் எல்லாம் செய்ய முடியாது வருத்தம் இல்லாமல் இருந்தால் தான் போட்டியில் வெற்றி பெற முடியும் என சொல்கிறார். அப்போது சந்தியாவிற்கு போன் வருகிறது அது மயில் போன் செய்கிறார். மயில் அம்மா கோவிலில் இருந்து வரும் போது என சொல்ல, சிவகாமி போனை வாங்குகிறார். என்னாச்சு உங்களுக்கு என சந்தியா கேட்க, அதெல்லாம் ஒன்றுமில்லை என சொல்கிறார். சரவணன் என்ன நடந்தது ஏன் உங்களது குரல் ஒரு மாதிரி இருக்கிறது என கேட்க அதெல்லாம் ஒன்றுமில்லை.

கோவிலில் இருந்து வரும் போது உன்னை போலவே ஒருவரை பார்த்தேன் அதான் உன்னுடைய ஞாபகம் வந்துவிட்டது என சொல்கிறார். சரவணன் போனை வைக்க சிவகாமி மயிலை திட்டுகிறார். இங்கே நடந்தது எல்லாம் சொன்னால் எப்படி அவன் சமையல் போட்டியில் கலந்து கொள்வான் என திட்டுகிறார். மயில் தெரியாமல் பேசிவிட்டேன் என சொல்கிறார். பாஸ்கரை விக்கி பாலோ செய்து வர, என்ன இவன் ஆபிஸ் பக்கம் போகிறான் என சந்தேகப்படுகிறார். பாஸ்கருக்கு போன் செய்து கேட்க பார்வதி வீட்டில் இல்லை என சொல்கிறார். விக்கி தன்னுடைய திட்டம் எல்லாம் வீணாகிவிட்டது என நினைத்து வருத்தப்படுகிறார்.

நெஞ்சுவலியால் துடிக்கும் தனத்தின் அம்மா, தனத்தை அழைத்து செல்ல வரும் ஜெகா – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

அர்ச்சனா தங்கை பிரியா போன் செய்து பாஸ்கரை திருமணம் செய்து வைக்க எந்த நடவடிக்கையும் நீ எடுக்கவில்லை என சொல்கிறார். நான் இப்போது சமையல் போட்டி நடக்கும் இடத்திற்கு வந்திருக்கேன் சரவணனை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் சந்தியாவை பழி வாங்க வேண்டும் என சொல்கிறார். அதை எல்லாம் சல்மா கேட்டுக் கொண்டிருக்க, நானும் சந்தியாவை பழி வாங்க வேண்டும் என்னை அவள் மிகவும் அசிங்கப்படுத்திவிட்டாள் அதனால் அவளை பழி வாங்க போறேன் என சொல்கிறார். நானும் அதற்காக தான் வந்திருக்கேன் என அர்ச்சனா சொல்கிறார்.

இன்னும் கொஞ்ச நேரத்தில் போட்டி தொடங்கிவிடும் என அனைவரும் பேசிக் கொண்டிருக்க சரவணன் சந்தியாவை காணவில்லை என கேட்கின்றனர். அப்போது சல்மா அவங்களுக்கு சிறப்பு கவனிப்பு இருக்கிறது என சல்மா சொல்கிறார். அவங்க வருவாங்க உங்களுக்கு ஏன் இவ்வளவு கோவம் என கேட்கிறார். பின் சல்மா எனக்கு போட்டியாளராக கோவம் வருகிறது என சொல்கிறார். அப்போது சரவணன் குடும்பத்துடன் வந்து எல்லாரையும் அறிமுகப்படுத்தி வைக்கிறார்.

லக்ஷ்மியை பார்க்க வரும் கண்ணம்மா, பாரதி கண்ணம்மாவை காரில் அனுப்ப சௌந்தர்யா செய்த திட்டம் – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

சந்தியா சல்மாவை அறிமுகப்படுத்தி வைக்க அர்ச்சனா தெரியும் என சொல்கிறார். சல்மா படித்துக் கொண்டே சமையல் போட்டிக்கு வருகிறார்கள் எவ்வளவு பெரிய விஷயம் என பெருமையாக சொல்கிறார். எங்கே படித்தாலும் நன்றாக படிக்க வேண்டும் எங்க சந்தியா மாநிலத்தில் முதலிடம் பிடித்திருக்கிறார் என சொல்ல சல்மா கோவப்படுகிறார். அனைவரும் சந்தோசமாக பேசிக் கொண்டிருக்கின்றனர். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

To Download=> Mobile APPDownload செய்யவும்
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here