ஐடி நிறுவனங்களில் தொடரும் Layoff – உங்களுக்கும் வேலை போக வாய்ப்பு!! ஊழியர்களே உஷார்!!

0
ஐடி நிறுவனங்களில் தொடரும் Layoff - உங்களுக்கும் வேலை போக வாய்ப்பு!! ஊழியர்களே உஷார்!!

ஐடி நிறுவனங்களில் தொடர்ந்து பணிநீக்கம் நடைபெற்று வரும் நிலையில் இந்தியாவில் அதிக அளவிலான பொருளாதார மந்த நிலை ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பணி நீக்கம்:

கொரோனா காலத்திற்கு பிறகு ஐடி துறைகளில் தொடர்ந்து மந்தநிலை நிலவி வருவதால் கடந்த ஒரு ஆண்டுகளாகவே அதிகளவிலான ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு வருகிறார்கள். மேலும், அனைத்து ஐடி நிறுவனமும் பணியமர்த்தல் விகிதத்தையும் குறைத்து வருகிறது. 2023ஆம் ஆண்டில் மட்டுமே 50 சதவீதம் கூடுதலான ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது மட்டுமல்லாமல், ஒவ்வொரு நிறுவனமும் செலவை குறைக்கும் எண்ணத்தில் முறையாக ஊழியர்களை பணி நீக்கம் செய்யாமல் ஒரு நிமிட கால் அல்லது மீட்டிங்கிலேயே அறிவிப்பினை வெளியிட்டு ஊழியர்களை பணி நீக்கம் செய்கின்றனர்.

குடும்பத்துடன் டூர் செல்ல திட்டமிடுகிறீர்களா? IRCTCன் சூப்பர் பேக்கேஜ்!!

அந்த வகையில், தற்போது மைக்ரோசாப்ட் நிறுவனம் 1900 ஊழியர்களையும், ZOOM நிறுவனம் 150 ஊழியர்களையும் இந்த வாரத்தில் மட்டுமே பணி நீக்கம் செய்துள்ளது. இவ்வாறு முன்னணி நிறுவனங்கள் தொடர்ந்து ஊழியர்களை பணி நீக்கம் செய்துவரும் நிலையில் 2024 ஆம் ஆண்டில் மிகப்பெரிய அளவில் பொருளாதார மந்த நிலை ஏற்படும் என பொருளாதாரம் மற்றும் பணி ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Join Our WhatsApp  Channel ”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!