‘பாரதி கண்ணம்மா’ பரினா வயிற்றில் குழந்தையுடன் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ – ரசிகர்கள் வாழ்த்து!

0
'பாரதி கண்ணம்மா' பரினா வயிற்றில் குழந்தையுடன் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ - ரசிகர்கள் வாழ்த்து!
'பாரதி கண்ணம்மா' பரினா வயிற்றில் குழந்தையுடன் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ - ரசிகர்கள் வாழ்த்து!
‘பாரதி கண்ணம்மா’ பரினா வயிற்றில் குழந்தையுடன் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ – ரசிகர்கள் வாழ்த்து!

பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லியாக நடித்து வரும் பரினா, இன்னும் சில காலங்களில் பிரசவிக்க இருக்கும் நிலையில் வயிற்றில் குழந்தையுடன் ஒரு க்யூட்டான ரீல்ஸ் வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த காணொளி மூலம் ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

இன்ஸ்டா ரீல்ஸ்

தற்போது நடிகைகள், நடிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒரு சமூக வலைதள செயலி என்றால் அது இன்ஸ்ட்ராகிராம் தான். அதிலும் இவர்கள் வெளியிடும் ரீல்ஸ் வீடியோக்களுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டமே உள்ளது. அந்த அளவுக்கு, இன்ஸ்ட்ராகிராம் செயலியை ஒப்பன் செய்தாலே பக்கம் பக்கமாக நடிகர், நடிகைகளின் ரீல்ஸ் வீடியோ தான் இடம் பிடித்திருக்கும். அந்த வரிசையில் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் நடிகை பரினாவும் ஒரு ரீல்ஸ் பைத்தியம் தான்.

இந்தியாவில் ரூ.100 லட்சம் கோடியில் புதிய வேலைவாய்ப்புகள் – பிரதமர் மோடி சுதந்திர தின விழா உரை!

இத்தொடரில் வில்லியாக நடித்து வரும் பரினா, உண்மையில் மிகவும் ஜாலியான குணம் கொண்டவர். இவருக்கு திருமணமாகி சுமார் 4 ஆண்டுகள் கழித்து தற்போது கர்ப்பமாக இருக்கிறார். இருப்பினும் சீரியலில் தொடர்ந்து நடித்து கொண்டே மக்களை என்டேர்டைன்மெண்ட் செய்து வருகிறார். அந்த வகையில் குழந்தையை பிரசவிக்க இன்னும் ஒரு சில காலங்களே இருக்கும் நிலையில், வித்தியாசமான உடையில் சமீபத்தில் மெட்டர்னிட்டி போட்டோ சூட் செய்து இவர் ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்தார்.

TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – துறைத் தேர்வுக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு!

இந்நிலையில் பொழுதுபோக்குக்காக இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் செய்து அவ்வப்போது பதிவிட்டு வரும் பரினா, தற்போது கருப்பு நிற உடையணிந்து ஒரு மலையாள பாடலுக்கு ரீல்ஸ் செய்த வீடியோவை பதிவிட்டுள்ளார். அதே உடையில் மற்றொரு ரீல்ஸ் வீடியோவிலும் அவர் இடம்பெற்றுள்ளார். இந்த காணொளியை கண்டு ரசித்த ரசிகர் பெருமக்கள், கமெண்ட் பக்கத்தில் பரினாவின் உடல் நலத்தை பற்றியும், குழந்தையை பற்றியும் விசாரித்து வாழ்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here