“DNA டெஸ்ட் முடிவு” வெண்பாவின் பித்தலாட்டத்தை அறிந்து பழிக்கு பழி வாங்கும் பாரதி – எதிர்பாராத திருப்பம்!

0
"DNA டெஸ்ட் முடிவு" வெண்பாவின் பித்தலாட்டத்தை அறிந்து பழிக்கு பழி வாங்கும் பாரதி - எதிர்பாராத திருப்பம்!
“DNA டெஸ்ட் முடிவு” வெண்பாவின் பித்தலாட்டத்தை அறிந்து பழிக்கு பழி வாங்கும் பாரதி – எதிர்பாராத திருப்பம்!

பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதி இத்தனை வருடங்களாக எதை நினைத்து குழப்பத்தில் இருந்தாரோ அதற்கான விடை கிடைக்கும் சமயம் வந்து விட்டது. இதன் பிறகு வெண்பாவை பாரதி விளாசி தள்ளும் காட்சிகள் இனி வர உள்ளது.

பாரதியின் நிலை:

பாரதி கண்ணம்மா சீரியலில், கண்ணம்மா பாரதியிடம் பல முறை தான் எந்த தவறும் செய்யவில்லை என்பதை சொல்லியும் பாரதி கொண்ட சந்தேகத்தின் காரணமாக கண்ணம்மாவை நம்ப மறுத்துவிட்டார். ஆனால் ஹேமாவும் லக்ஷ்மியும் பாசமாக இருப்பதை பார்த்தும், லட்சுமி அப்பா பாசத்திற்கு ஏங்குவதை பார்த்தும், கண்ணம்மா தனி ஆளாக எதிர்கொள்ளும் துயரங்களை பார்த்தும், கண்ணம்மாவை ஏற்றுக் கொள்வதாக சில முறை குடும்பத்தினர் அனைவர் முன்னிலையிலும் கூறியிருந்தார்.

Follow our Instagram for more Latest Updates

பாரதி கண்ணம்மாவை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றால், கண்ணம்மா தான் செய்த தவறை ஒத்துக் கொள்ள வேண்டும் என்று கூறியது கண்ணம்மாவின் தன் மானத்தை சீண்டியது. இவ்வளவு தூரம் சொல்லியும் நீங்கள் என்னை நம்பவில்லை என்றால், உங்கள் உறவு எங்களுக்கு தேவையில்லை என்று கண்ணம்மா பாரதியை உதறி விடுவார். இத்தனை போராட்டங்களுக்கு பிறகு, தற்போது தான் மருத்துவராக இருக்கும் பாரதிக்கு ஏன் நாம் DNA டெஸ்ட் செய்து கொள்ள கூடாது என்ற யோசனை வந்துள்ளது.

2024 ஆம் ஆண்டு ஜனவரியில் திறக்கப்படும் அயோத்தி ராமர் கோவில் – வெளியான சூப்பர் அப்டேட்!

Exams Daily Mobile App Download

DNA டெஸ்ட் முடிவுகள் எப்படி வருகிறதோ அதற்கு ஏற்றவாறு தன் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடிவு செய்து, வெண்பாவுடன் திருமணத்திற்கு சம்மதிக்கிறார். ஒருவழியாக DNA டெஸ்ட் முடிவுகள் வந்து விடுகிறது. அதன்பிறகு, தான் வெண்பா தன் வாழ்க்கையில் செய்த சதித்திட்டம் அனைத்தும் பாரதிக்கு தெரியவருகிறது. இதனால் மணமேடை வரை வந்து வெண்பாவின் அனைத்து பித்தலாட்டத்தையும் அனைவரின் முன்பு சொல்லுகிறார். இதன் பிறகு கண்ணம்மா பாரதியை ஏற்பாரா? இல்லையா? என்பதை நோக்கி கதை நகர உள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!