BARC அணு ஆராய்ச்சி மையத்தில் 10 வது தேர்ச்சி அடைந்தவர்களுக்கு வேலை – மாதம் ரூ.25,500 ஊதியம்..!

0
BARC அணு ஆராய்ச்சி மையத்தில் 10 வது தேர்ச்சி அடைந்தவர்களுக்கு வேலை - மாதம் ரூ.25,500 ஊதியம்..!
BARC அணு ஆராய்ச்சி மையத்தில் 10 வது தேர்ச்சி அடைந்தவர்களுக்கு வேலை - மாதம் ரூ.25,500 ஊதியம்..!
BARC அணு ஆராய்ச்சி மையத்தில் 10 வது தேர்ச்சி அடைந்தவர்களுக்கு வேலை – மாதம் ரூ.25,500 ஊதியம்..!

பாபா அணு ஆராய்ச்சி மையம் (BARC) தற்போது Work Assistant, Stenographer, Driver பதவிகளுக்கு காலிப்பணியிடங்கள் நிரப்புவதை குறிப்பிட்டு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் மேற்கண்ட பணிகளுக்கு என்று மொத்தமாக 89 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது. இப்பதிவை முழுமையாக வாசித்தபின், இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்கள் தங்களின் பதிவுகளை உடனே செய்து கொள்ள அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Bhabha Atomic Research Centre (BARC)
பணியின் பெயர் Work Assistant, Stenographer, Driver
பணியிடங்கள் 89
விண்ணப்பிக்க கடைசி தேதி 31.07.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

BARC பணியிடங்கள்:

பாபா அணு ஆராய்ச்சி மையம் வெளியிட்ட அறிவிப்பில், Work Assistant, Stenographer, Driver ஆகிய பணிகளுக்கு என்று மொத்தமாக 89 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

  • Stenographer (Grade III) – 06
  • Driver (Ordinary Grade) – 11
  • Work Assistant-A – 72
BARC கல்வித் தகுதி:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகரித்த கல்வி நிலையங்களில் 10 வது தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள். மேலும் கல்வித் தகுதி குறித்த தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானதும் அறிவிப்பில் பார்க்கலாம்.

Exams Daily Mobile App Download
BARC அனுபவ விவரம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் விண்ணப்பிக்கும் பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் தேவையான அளவிற்கு பணி அனுபவம் வைத்திருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

BARC வயது விவரம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 18 வயது நிரம்பியவராகவும், 27 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வுகள் பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானதும் அறிவிப்பில் பார்க்கலாம்.

BARC ஊதிய விவரம்:

Stenographer (Grade III) பணிக்கு ரூ.25,500/- என்றும், Driver (Ordinary Grade) பணிக்கு ரூ.19,900/- என்றும் மற்றும் Work Assistant-A பணிக்கு ரூ.18,000/- என பணிக்கு தகுந்தாற்போல் தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு மாத ஊதிய தொகை வழங்கப்பட உள்ளது.

BARC தேர்வு முறை:

மேற்கண்ட அனைத்து பணிகளுக்கும் விண்ணப்பதாரர்கள் தேர்வுகள் அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best TNPSC Coaching Center – Join Now

BARC விண்ணப்ப கட்டணம்:

SC / ST, PWD / Ex-servicemen மற்றும் Women விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் கிடையாது. மற்ற அனைத்து வகுப்பைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் ரூ.100/- விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.

BARC விண்ணப்பிக்கும் முறை:

தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்கள் அதிகாரப்பூர்வ தளத்திற்கு சென்று தங்களுக்கு தேவையான பணிக்கு என்று கொடுத்துள்ள விண்ணப்பங்களை பெற்று சரியாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். மேலும் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க 01.07.2022 ம் தேதி முதல் 31.07.2022 ம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!