ஹேமா ஏன் என் பொண்ணா இருக்க கூடாது? கண்ணம்மா நினைக்கும் காரணங்கள்!

0
ஹேமா ஏன் என் பொண்ணா இருக்க கூடாது? கண்ணம்மா நினைக்கும் காரணங்கள்!
ஹேமா ஏன் என் பொண்ணா இருக்க கூடாது? கண்ணம்மா நினைக்கும் காரணங்கள்!
ஹேமா ஏன் என் பொண்ணா இருக்க கூடாது? கண்ணம்மா நினைக்கும் காரணங்கள்!

விஜய் டிவி பாரதி கண்ணம்மா சீரியலில், ஹேமா தான் தன்னுடைய இரட்டை குழந்தைகளில் ஒன்றாக இருப்பாளோ என்ற சந்தேகம் 8 வருடங்களுக்கு பின்னர் கண்ணம்மாவிற்கு வந்துள்ளது. ஹேமா தான் தன்னுடைய குழந்தை என நினைக்க கண்ணம்மாவின் அடுத்தடுத்த பதில்கள் சௌந்தர்யாவை வேறு எதுவும் பேச முடியாமல் செய்துள்ளது.

பாரதி கண்ணம்மா:

விஜய் டிவி பாரதி கண்ணம்மா சீரியலில், தனக்கு இரட்டை குழந்தைகள் தான் பிறந்துள்ளது என கண்ணம்மாவிற்கு 8 வருடங்களுக்கு பின்னர் தெரிந்துள்ளது. ஒரு குழந்தை லட்சுமி என்றால் மற்றொரு குழந்தைக்கு என்னாச்சு என கண்ணம்மா பித்து பிடித்தது போல இருக்க, அஞ்சலியின் வளைகாப்புக்கு வந்த கண்ணம்மா ஹேமா தன்னை போலவே இருப்பதாக உணர்கிறார். அப்போது சமயம் பார்த்து அஞ்சலியும், வெண்பாவிற்கும், பாரதிக்கும் கல்யாணம் ஆகவில்லை என்ற உண்மையை சொல்ல, அப்போ ஹேமா யாரு என சௌந்தர்யாவிடம் கேட்கிறார். சௌந்தர்யா ஹேமாவை தத்து எடுத்து வளர்க்கிறோம் என சொல்லி சமாளிக்க அதெல்லாம் இல்லை ஹேமா என்னுடைய குழந்தை என கண்ணம்மா சொல்கிறார்

விஜய் டிவியில் மீண்டும் களமிறங்கும் நடிகை ஆனந்தி – வெளியான படப்பிடிப்பு புகைப்படம்!

சௌந்தர்யா இல்லவே இல்லை என சமாளிக்க கண்ணம்மா இன்னும் அந்த சந்தேகத்தில் தான் சுற்றிக் கொண்டு இருக்கிறார். இது பற்றி துளசி, அகில், அஞ்சலியிடம் கேட்க யாரும் உண்மையை சொல்லவில்லை. இந்த கண்ணம்மா எப்படி ஹேமா தான் என்னுடைய மகள் என உறுதியாக இருக்கிறார் என்ற குழப்பம் ரசிகர்களிடம் எழுந்துள்ளது. இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. ஹேமாவிற்கும், லட்சுமிக்கும் ஒரே நாளில் பிறந்தநாள் ஹேமா அப்படியே கண்ணம்மா நிறத்தில் இருக்கிறாள்.

சன் டிவி ‘ரோஜா’ சீரியலில் வரப்போகும் அடுத்த ட்விஸ்ட் – இன்றைய எபிசோட் ப்ரோமோ!

ஹேமாவிற்கு அம்மா இல்லை, லட்சுமிக்கு அப்பா இல்லை, ஹேமா முன்னர் சமையல் ஆன்ட்டி என அழைத்ததற்கு வேண்டாம் சமையல் அம்மா என கூப்பிட சௌந்தர்யா சொன்னது, அது மட்டுமில்லாமல் ஹேமாவை காணவில்லை என தெரிந்ததும் கண்ணம்மா துடித்தது தாய் பாசம் மட்டுமே காரணம். எனவே கண்ணம்மாவிற்கு ஹேமா தான் தன்னுடைய குழந்தை என சொல்லும் அனைத்து காரணங்களும் அப்படியே பொருந்த வெண்பா, துளசி இரண்டு பேர்கிட்டயும் பதில் இல்லை. ஆனால் சௌந்தர்யா உண்மையை சொல்வதற்குள் கண்ணம்மாவே உண்மையை கண்டுபிடித்து விடுவார் போல இருக்கிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here