நெஞ்சுவலியால் துடிக்கும் வேணு , கண்ணம்மாவை வர வைக்க திட்டம் – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!!

0
நெஞ்சுவலியால் துடிக்கும் பாரதி, கண்ணம்மாவை வர வைக்க திட்டம் - இன்றைய
நெஞ்சுவலியால் துடிக்கும் பாரதி, கண்ணம்மாவை வர வைக்க திட்டம் - இன்றைய "பாரதி கண்ணம்மா" எபிசோட்!!
நெஞ்சுவலியால் துடிக்கும் வேணு , கண்ணம்மாவை வர வைக்க திட்டம் – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், வேணு நெஞ்சு வலி வந்து துடிக்கிறார். உடனே பாரதி மருத்துவமனைக்கு கூட்டிக் கொண்டு வருகின்றனர். உடனே வேணு கண்ணம்மாவை வர சொல்லு அதான் என்னுடைய கடைசி ஆசை என சொல்கிறார்.

பாரதி கண்ணம்மா:

இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில், வேணு திடீரென நெஞ்சு வலி வந்து கத்துகிறார். சௌந்தர்யா என்னாச்சு என கேட்க நெஞ்சு வலிக்கிறது. தோள் வலிக்கிறது என சொல்கிறார். உடனே அங்கே அகில் வர உன் அப்பாவிற்கு நெஞ்சு வலிக்கிறதாம் என சொல்லுகிறார். உடனே அஞ்சலியை லெமன் ஜூஸ் கொண்டு வர சொல்ல, அஞ்சலி கொண்டு வருகிறார். ஆனால் அதை குடிக்கமால் எனக்கு நெஞ்சு வலிக்கிறது என சொல்கிறார். பின் அவரை அழைத்து கொண்டு பாரதியின் மருத்துவமனை செல்கிறார்.

அங்கேயும் நெஞ்சு வலி தாங்க முடியாமல் துடிக்கிறார். அப்போது சௌந்தர்யா பாரதி எங்கே என கேட்க, இதோ 2 நிமிடத்தில் வந்துவிடுவான் என சொல்கிறார். பாரதி பதறி போய் அங்கே வர, வேணு நெஞ்சு வலியால் துடிக்கிறார். பாரதி பரிசோதனை செய்துவிட்டு எதுவும் பிரச்சனை இல்லை என நினைக்கிறார். ஆனால் வேணு வலியால் துடிப்பதை பார்த்து எதுவும் புரியாமல் இருக்கிறார். என்ன ஆயிருக்கும் என தெரியாமல் பாரதி இருக்க, வேணு என்னை காப்பாற்றுங்கள் என கத்துகிறார்.

6 மாதங்களுக்கு பின்னர் ஒக்கேனக்கலில் சுற்றுலா – அரசு அனுமதி!

உடனே சௌந்தர்யாவிடம் கண்ணை காட்டுகிறார். அப்போது தான் அவர் நடிக்கிறார் என தெரிகிறது. அதன் பின் அவர் கண்ணம்மாவை வர சொல்லுங்க நான் பார்க்க வேண்டும் இது தான் என்னுடைய கடைசி ஆசை என சொல்லி புலம்புகிறார். உடனே பாரதி இது தான் கடைசியாக நடக்கும் என தெரியுமே என சொல்லி கோபப்படுகிறார். சௌந்தர்யா அகில் சேர்ந்து அப்பா வலியில் துடிக்கிறார். நீ ஏன் இப்படி பண்ணுகிறாய் என சொல்லி நடிக்கின்றனர்.

கண்ணம்மாவை வர சொல்லு என சொல்ல, பாரதி அங்கிருந்து கிளம்புகிறார்.மறுபக்கம் லட்சுமி புது ட்ரெஸ் போட்டு வந்து நிற்க அத்தை மாதிரியே இருக்க என கண்ணம்மா நினைத்து பார்க்கிறார். அப்போது குமார் லட்சுமியை பார்க்க டாக்டர் தம்பியின் அம்மா போலவே இருக்கிறார் என சொல்கிறார். உடனே லட்சுமி ஆமாம் நான் அந்த பாட்டி போல தான் இருக்கேன், ஹேமாவை விட நான் தான் அவங்களை போல இருக்கேன் என சொல்கிறார். ஆமாம் நீ உன் அப்பாவின் அம்மா போலவே இருக்க என கண்ணம்மா சொல்கிறார். நான் தான் அப்பாவை பார்த்ததே இல்லையே என சொல்கிறார்.

ஜீ தமிழ் ‘செம்பருத்தி’ சீரியலில் புதுப்புது ட்விஸ்ட் – ரசிகர்கள் உற்சாகம்!

அப்போது கண்ணம்மாவிற்கு சௌந்தர்யா போன் செய்கிறார். வேணுவிற்கு நெஞ்சுவலி என சொல்லி அழுகிறார். உடனே கண்ணம்மா கிளம்பி வர, அப்போது வெண்பா போன் செய்கிறார். கண்ணம்மா கட் செய்துவிட வெண்பா மீண்டும் போன் செய்கிறார். உடனே கண்ணம்மா போனை எடுத்து திட்டிவிடுகிறார். மருத்துவமனையில் வேணு சௌந்தர்யா நடித்து கொண்டிருக்க அகில் முட்டை போண்டா வாங்கி வருகிறார். அதை அனைவரும் சாப்பிடும் போது பாரதி வந்துவிடுகிறார். அப்பாவிற்கு முடியாமல் இருக்கு முட்டை போண்டா சாப்பிடுறீங்க என சொல்லி அங்கிருந்து கிளம்ப அப்போது கண்ணம்மா வருகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!