வெளிவந்த பாரதியின் உண்மை முகம், இரண்டாவது குழந்தையை நினைத்து வருத்தப்படும் கண்ணம்மா – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!!

0
வெளிவந்த பாரதியின் உண்மை முகம், இரண்டாவது குழந்தையை நினைத்து வருத்தப்படும் கண்ணம்மா - இன்றைய
வெளிவந்த பாரதியின் உண்மை முகம், இரண்டாவது குழந்தையை நினைத்து வருத்தப்படும் கண்ணம்மா - இன்றைய "பாரதி கண்ணம்மா" எபிசோட்!!
வெளிவந்த பாரதியின் உண்மை முகம், இரண்டாவது குழந்தையை நினைத்து வருத்தப்படும் கண்ணம்மா – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், கண்ணம்மா மீது தப்பில்லை என திருந்தியது போல பாரதி சொல்கிறார். உடனே சௌந்தர்யா சென்று கண்ணம்மாவை அழைத்து கொண்டு வா என சொல்கிறார். உடனே பாரதி சிரித்து கொண்டே நான் இப்படி எல்லாம் பேச வேண்டும் என்று தான நினைக்கிறீங்க என பேசிவிட்டு கிளம்புகிறார்.

பாரதி கண்ணம்மா:

இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில், பாரதி தவறை உணர்ந்ததாக குடும்பத்தினரிடம் சொல்லி அழுகிறார். குடும்பத்தில் இருப்பவர்கள் சந்தோஷத்தில், பாரதியை கட்டி அணைத்து ஆறுதல் சொல்கிறார். உடனே சௌந்தர்யா இதை தான இத்தனை வருசமாக சொல்கிறேன் நீ கேட்டால் தான, இனிமேல் சென்று அவ காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு வர சொல்லு என சொல்கிறார். உடனே பாரதி வில்லத்தனமான சிரிக்கிறார். இப்படி தான நான் பேச வேண்டும் என நினைக்கிறீங்க என சொல்கிறார்.

இப்போ கூட நான் சொன்னதை நீங்க நம்புறீங்க, ஆனால் என்னை நீங்க நம்பவே இல்லை உங்களுக்கு எல்லாம் ஒரு நாள் இருக்கு என சொல்லி அங்கிருந்து கிளம்புகிறார். கண்ணம்மா இரட்டை குழந்தைகளில் இன்னொரு குழந்தையை காணவில்லை என நினைக்கிறார். அப்போது லட்சுமி ரோடில் பிச்சை எடுப்பவர்கள் பற்றி கேட்கிறார். ஏன் அவங்க எல்லாம் பிச்சை எடுக்குறாங்க என கேட்கிறார். அவங்களுக்கு யாரும் இல்லை அதனால் தான் பிச்சை எடுக்குறாங்க என சொல்கிறார்.

தமிழகத்தில் செப்.23ம் தேதி மின்தடை ஏற்பட உள்ள பகுதிகளின் விபரம் – வெளியீடு!

அப்போது வீட்டு வாசலில் ஒருவர் பிச்சை எடுக்க வருகிறார். அதை பார்த்ததும் கண்ணம்மா இரண்டாவது குழந்தையை நினைத்து அழுகிறார். ஒரு முடிவு செய்துவிடுவோம் என நினைத்து போலீசில் வெண்பா மீது புகார் அளிக்க செல்கிறார். லட்சுமியிடம் போனை கொடுத்துவிட்டு, கண்ணம்மா குமார் ஆட்டோவில் செல்கிறார். அப்போது வெண்பா போன் செய்ய லட்சுமி எடுத்து போலீஸ் ஸ்டேஷன் போயிருக்காங்க அம்மா என சொல்கிறார். உடனே பதட்டம் அடைந்த வெண்பா குமார் நம்பர் வாங்கி போன் செய்கிறார்.

கண்ணம்மாவிடம் என்னை மாட்டிவிட போலீஸ் ஸ்டேஷன் போய்டியா என கேட்க உன்னை எல்லாம் முன்னாடியே மாட்டி விட்டிருக்க வேண்டும். இப்போ நாள் ஆயிருச்சு என சொல்ல, வெண்பா ஏற்பாடு செய்த எதார்த்தம் ஒரு குழந்தையை நடிக்க வைத்து போனில் அழ வைக்கிறார். அதை கேட்டதும் கண்ணம்மா பதட்டம் அடைகிறார். அந்த குழந்தை அம்மா அம்மா வலிக்கிது என அழுகிறார். அதை கேட்டதும் கண்ணம்மாவிற்கு தாங்க முடியவில்லை.

தமிழகத்தில் இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு – பொதுப்பிரிவினர் கவனத்திற்கு!

கண்ணம்மா போலீஸ் ஸ்டேஷன் போக கூடாது என சொல்லி வெண்பா மிரட்டுகிறார். உடனே நீ ஆட்டோவில் ஏறி வீட்டிற்கு போக வேண்டும் என சொல்கிறார். உடனே வெண்பா அந்த பொண்ணை விட்டுவிடு என சொல்கிறார். கண்ணம்மா இத்தனை வருஷம் உன் பொண்ணை பத்திரமாக தான் பார்த்திருக்கேன் இனிமேல் பார்த்துக் கொள்ள வேண்டுமா என நீ தான் முடிவு செய்ய வேண்டும் என சொல்கிறார். குமார் என்ன பிரச்சனை என கேட்க கண்ணம்மா எதுவும் இல்லை என சொல்கிறார். வீட்டிற்கு வந்து இன்னொரு குழந்தையை நினைத்து கவலைப்படுகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!