கண்ணம்மாவின் ஆதார் கார்டில் அப்பா முகவரியை பார்த்த லட்சுமி, உண்மையை சொல்ல போகும் கண்ணம்மா – இன்றைய எபிசோட்!

0
கண்ணம்மாவின் ஆதார் கார்டில் அப்பா முகவரியை பார்த்த லட்சுமி, உண்மையை சொல்ல போகும் கண்ணம்மா - இன்றைய எபிசோட்!
கண்ணம்மாவின் ஆதார் கார்டில் அப்பா முகவரியை பார்த்த லட்சுமி, உண்மையை சொல்ல போகும் கண்ணம்மா - இன்றைய எபிசோட்!
கண்ணம்மாவின் ஆதார் கார்டில் அப்பா முகவரியை பார்த்த லட்சுமி, உண்மையை சொல்ல போகும் கண்ணம்மா – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் லட்சுமி ஏன் இப்படி இருக்கிறாள் என கண்ணம்மா கேட்டுக் கொண்டிருக்க அப்போது வாக்காளர் பட்டியல் எடுக்க ஒருவர் வருகிறார். அந்த நேரம் கண்ணம்மாவின் ஆதார் அட்டையை லட்சுமி பார்த்துவிடுகிறார். அதில் உள்ள முகவரியை வைத்து வர அது பாரதி வீட்டிற்கு வருகிறது.

பாரதி கண்ணம்மா:

இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில், லட்சுமி கண்ணம்மாவிடம் கோவப்பட கண்ணம்மா ஏன் இப்படி எல்லாம் நடந்து கொள்கிறாய் என கேட்கிறார். அப்போது லட்சுமி ஹேமா பேசியதை நினைத்து பார்க்கிறார். என்னுடைய அப்பா இந்த ஊரில் இருபத்து தெரிந்து கூட ஹேமா என்னிடம் இப்படி சொன்னா அதெல்லாம் உனக்கு சொன்னால் புரியாது என நினைத்து பார்க்கிறாள். அப்போது ஒருவர் வந்து வாக்காளர் பட்டியலுக்கு பெயர் சேர்க்க வேண்டும் வீட்டில் எத்தனை பேர் என கேட்கிறார். அப்போது கண்ணம்மா நானும் என் மகளும் தான் என சொல்ல, கண்ணம்மாவின் ஆதார் அட்டையை கேட்கிறார்.

தமிழகத்தில் பள்ளிகளுக்கு 30 நாட்கள் விடுமுறை – 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு!

அப்போது கண்ணம்மா எடுக்க லட்சுமி அதை பார்த்தும் பார்க்காமல் இருக்கிறாள். அவர் அதில் கண்ணம்மாவின் பழைய முகவரி இருப்பதாக சொல்ல, ஆமாம் என கண்ணம்மா சொல்கிறார். லட்சுமி அது அப்பாவுடன் வாழ்ந்த முகவரியாக இருக்குமா என சதேகப்படுகிறாள். பின் கண்ணம்மாவை அவர் முகவரி மாற்ற சொல்கிறார். கண்ணம்மா அதை மீண்டும் வைத்துவிட லட்சுமி அவருக்கு தெரியாமல் அதை எடுக்கிறாள். அதில் உள்ள முகவரியை வைத்து அப்பாவை கண்டுபிடிக்கலாம் என சந்தோசப்படுகிறாள்

பின் மறுநாள் லட்சுமி ஸ்கூலிற்கு கிளம்ப கடவுளிடம் வேண்டிக் கொள்கிறார். அப்போது கண்ணம்மா ஒழுங்காக ஸ்கூலிற்கு போக வேண்டும் எங்கையும் போக கூடாது என சொல்கிறார். குமார் கொண்டு சென்று ஸ்கூலில் விட, குமாரை லட்சுமி போக சொல்கிறாள். பின் கண்ணம்மா சௌந்தர்யாவிற்கு போன் செய்து லக்ஷ்மியின் நடவடிக்கை எதுவும் சரி இல்லை என சொல்கிறார். சௌந்தர்யா இங்கே வா பேசிக்கலாம் என சொல்கிறாள். பின் லட்சுமி ஸ்கூலில் இருந்து கிளம்பி அந்த முகவரியை தேடி அலைகிறார்.

விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் இருந்து விலகும் முல்லை – இவருக்கு பதில் இனி இவர் தான்!

அப்போது லட்சுமி ரோட்டில் அனைவரிடமும் அதை கேட்டு நீண்ட தூரம் நடக்கிறார். பின் கண்ணம்மா சௌந்தர்யா வீட்டிற்கு வர லட்சுமி அப்பாவை தேடி இரவெல்லாம் தூங்காமல் இருக்கிறாள் என சொல்கிறார். அகில் லட்சுமியிடம் நேரடியாக உண்மையை சொல்வது தான் சரி என சொல்ல, சௌந்தர்யா அப்படி செய்தால் பாரதி என்ன செய்வான் என நினைக்கிறார். லட்சுமி அந்த முகவரியை தேட , கண்ணம்மா நான் உண்மையை சொல்ல தான் போகிறேன் என சொல்கிறார். அந்த நேரம் பாரதி வந்து என்ன உண்மை என கேட்க, நீங்க தான் லக்ஷ்மியின் அப்பா என்ற உண்மை என சொல்கிறார். நான் லக்ஷ்மியின் அப்பா இல்லை என சொல்ல, சௌந்தர்யா பாரதியை திட்டுகிறார். பின் லட்சுமி அந்த முகவரியை வைத்து ஒரு கேட் அருகே வந்து அது தான் என கண்டுபிடிக்கிறார். பின் அவர் உள்ளே வர இந்த இடத்தை ஏற்கனவே பார்த்துள்ளதாக நினைக்கிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!