மீண்டும் அப்பா பற்றி கேட்ட லட்சுமி, ஹேமா ஸ்கூலிற்கு பாரதியுடன் வந்த வெண்பா – இன்றைய எபிசோட்!

0
மீண்டும் அப்பா பற்றி கேட்ட லட்சுமி, ஹேமா ஸ்கூலிற்கு பாரதியுடன் வந்த வெண்பா - இன்றைய எபிசோட்!
மீண்டும் அப்பா பற்றி கேட்ட லட்சுமி, ஹேமா ஸ்கூலிற்கு பாரதியுடன் வந்த வெண்பா - இன்றைய எபிசோட்!
மீண்டும் அப்பா பற்றி கேட்ட லட்சுமி, ஹேமா ஸ்கூலிற்கு பாரதியுடன் வந்த வெண்பா – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், லக்ஷ்மியை ஸ்கூலில் அனைவரும் அப்பா இல்லாத பெண் என பேச அப்பா ஏன் நம்மளை விட்டு சென்றார் என லட்சுமி கேட்கிறார். பின் வெண்பா ஹேமா மீது அக்கறை இருப்பது போல ஸ்கூலிற்கு போவோம் என பாரதியை அழைக்கிறார்.

பாரதி கண்ணம்மா:

இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில், லட்சுமி குமார் ஆட்டோவில் வந்து இறங்க அப்போது ஹேமா லக்ஷ்மியை பார்த்து ஓடி வருகிறார். உன் அப்பா வரவில்லையா என லட்சுமி கேள்வி கேட்க நான் ட்ரைவர் உடன் வந்தேன் என ஹேமா சொல்கிறார். உங்க வீட்டில் வேலைக்கு கூட ஆள் இருக்கு நீங்க பணக்காரவங்க, எங்க வீட்டில் அப்படி இல்லை எல்லா வேலையும் நாங்க தான் செய்ய வேண்டும் என லட்சுமி சொல்ல அதெல்லாம் எனக்கு தெரியாது என ஹேமா சொல்கிறார். பின் லட்சுமி உங்க வீட்டில் 3 கார் இருக்கிறது ஆனால் எங்க வீட்டில் பொம்மை கார் கூட 2 தான் இருக்கிறது என சொல்கிறார்.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ஜீவாவிற்கு உண்மையிலேயே குடிப்பழக்கம் உள்ளதா? அவரே அளித்த ஷாக் விளக்கம்!

அம்மாவிற்கு வெட்டிய கேக் இருக்கிறது வேண்டுமா என லட்சுமி கேட்க நான் அப்பறம் சாப்பிடுறேன் என ஹேமா சொல்கிறார். பின் லட்சுமி வாட்ச் மேன்னிற்கு கேக் கொடுக்க என்ன விசேஷம் என கேட்கிறார், என் அம்மாவிற்கு பிறந்தநாள் என சொல்ல, அவர் உடன் இருந்தவரிடம் பாவம் அப்பா இல்லை என சொல்கிறார் என்னாச்சு என இன்னொருவர் கேட்க அது சரியாக தெரியவில்லை என சொல்ல ஹேமா அவர்களிடம் கோவமாக பேசுகிறார். பின் பாரதி ஹேமா சொன்னதை பற்றி நினைத்துக் கொண்டிருக்க அப்போது வெண்பா வருகிறார்.

இன்னும் கை கூட கழுவாமல் என்ன செய்கிறாய் என கேட்க, அதெல்லாம் ஒன்றுமில்லை என பாரதி சொல்கிறார். பின் வெண்பா நாம ஹேமா எப்படி படிக்கிறார் என ஸ்கூலிற்கு சென்று விசாரித்துவிட்டு வருவோம் என சொல்ல, பாரதி சரி என சொல்கிறார். பின் லட்சுமி அவர்கள் பேசியதை நினைத்து சோகமாக இருக்க அப்போது கண்ணம்மா சாப்பாடு கொண்டு வருகிறார். கண்ணம்மாவிடம் லட்சுமி அப்பா நம்மை விட்டு ஏன் போனார் என கேட்க கண்ணம்மாவிற்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. நானும் எதுவும் கேட்க கூடாது என்று தான் நினைக்கிறேன் ஆனால் இதை எல்லாம் கேட்கமல் இருக்க முடியவில்லை என லட்சுமி சொல்கிறார்.

வெண்பாவை திருமணம் செய்து கொள்ளும் பாரதி – சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட்!

பின் வெண்பா பாரதி ஹேமா எப்படி படிக்கிறாள் என பிரின்சிபால்லிடம் பேச, அவர் நன்றாக படிப்பதாக சொல்கிறார். அப்போது கண்ணம்மா வர பிரின்சிபால்லிற்கு கேக் கொடுக்கிறார். பின் லட்சுமியை படிக்க வைப்பதற்கு பாரதிக்கு அந்த சார் நன்றி சொல்ல, லக்ஷ்மிக்கு பெரிய ஆள் ஆகி என்ன ஆக வேண்டும் என கேட்கிறார். அவளுக்கு கலெக்டர் ஆக வேண்டும் என ஹேமா சொல்ல, ஹேமாவின் கனவை லட்சுமி சொல்கிறார். கண்ணம்மா இருவரும் அக்கா தங்கை மாதிரி தான் பழகுவதாக சொல்ல அதை கேட்டு பாரதி கோபப்படுகிறார்.

வெண்பா கண்ணம்மாவிற்கு உண்மை தெரிந்திருக்குமோ என நினைத்து குழப்படமடைகிறார். ஹேமாவிற்கு நிறைய முறை ஸ்கூலில் இவர் ஊட்டி விடுவதை பார்த்திருக்கிறேன் என அந்த சார் பாரதியிடம் சொல்ல, ஸ்கூலில் அம்மா மாதிரி பார்த்துக் கொள்ள ஒரு ஆள் இருக்கிறார் அப்பறம் உங்களுக்கு என்ன கவலை என சொல்கிறார். பின் கண்ணம்மா ஆமாம் சார் நான் பார்த்துக் கொள்கிறேன். டாக்டர் சாருக்கு நிறைய வேலை இருக்கும் அவங்களுடன் இருக்காங்களே டாக்டர் வெண்பா அவங்க தங்கச்சி மாதிரி இவருக்கு அவங்களும் தேவை இல்லாமல் அலைய வேண்டாம் என சொல்கிறார்.

வெண்பாவும் பாரதியும் அங்கிருந்து கிளம்ப வெளியே வந்து வெண்பா என்னையும் உன்னையும் அவ அண்ணன் தங்கச்சி என சொல்கிறார். இவ்வளவு நடந்தும் நீ அவள் மீது கருணையாக பேசுனாய் அதனால் தான் இப்படி நடந்து கொள்வதாக சொல்கிறார். பின் அவள் திடீரென ஹேமா மீது பாசம் காட்டி வளைத்து போட பாக்கிறாள் என சொல்ல, பாரதி அவள் எப்போதும் ஹேமா மீது பாசமாக தான் இருப்பாள் நீ தான் புதிதாக இருக்கிறாய் என சொல்கிறார். அதை கேட்டு வெண்பா கடுப்பாகிக்கிறார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!