வெண்பாவை திருமணம் செய்து கொள்ளும் பாரதி – சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட்!

0
வெண்பாவை திருமணம் செய்து கொள்ளும் பாரதி - சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட்!
வெண்பாவை திருமணம் செய்து கொள்ளும் பாரதி - சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட்!
வெண்பாவை திருமணம் செய்து கொள்ளும் பாரதி – சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதியுடன் ஏற்பாடு செய்து கொண்ட திருமணம் நின்று விட்டதால் இந்த முறை பாரதியை மிஸ் செய்ய கூடாது என்பதற்காக வெண்பா மாஸ்டர் பிளான் ஒன்றை செய்து வருகிறார்.

பாரதி கண்ணம்மா:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது பிறந்த நாள் விழா நல்ல படியாக நடந்து முடிந்து விட்டது. இந்த நிலையில் தற்போது பாரதி கண்ணம்மா சீரியலில் அடுத்த ட்விஸ்ட் வைக்க இருப்பது பாரதியின் செல்ல மகள் ஹேமா. இன்றைய எபிசோடில் பாரதிக்கு கல்யாணம் செய்து வைக்க வேண்டும் என்று முடிவு எடுக்கிறார் ஹேமா.

அதற்கான முக்கிய காரணம் என்னவென்றால், ஹேமா, பாரதி படும் வேதனைகளை அதிகம் பார்ப்பது. பாரதி தனக்கு யாரும் இல்லை என அழுவது, அடிக்கடி சாப்பிடாமல் கோபப்படுவது, தனியாகவே இருப்பது என பாரதி செய்யும் செயல்கள் ஹேமாவுக்கு அவர் மீது அக்கறையும் கவலையும் நிறைய வந்து விட்டது. அது மட்டுமல்லாமல், தன்னுடைய ஸ்கூல் ஃபிரண்ட் மீனாவுடை அப்பா இரண்டாவது திருமணம் செய்து கொண்டது போலவே, தனது அப்பாவுக்கும் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று நினைத்து கொண்டு இருக்கிறார்.

இதைப்பற்றி தனது அப்பாவிடம் போய் நேரடியாக பேசுகிறார் ஹேமா. குழந்தைக்கு இப்படி ஒரு எண்ணம் வந்துவிட்டது சீரியலில் வில்லியாக வரும் வெண்பாவுக்கு தெரிந்துவிட்டது. அதன் பின்னர் அதிரடியாக பாரதி மீது அக்கறை இருப்பது போல் சாப்பாடு ஆர்டர் செய்வது, பாரதி மீது அக்கறை காட்டுவது என நடிக்க ஆரம்பித்து விட்டார். இதைப் பார்த்து ஹேமா மயங்கி, பாரதிக்கு தன்னை திருமணம் செய்து வைப்பார் என்ற எண்ணம் கொண்டு இவ்வாறு எல்லாம் செய்து வருகிறார் வெண்பா . ஆனால் ஹேமா மனதில் தோன்றுவது வெண்பா இல்லை. சமையல் அம்மா கண்ணம்மா மட்டும் தான். அந்த காட்சிகள் இனி வரும் நாட்களில் ஒளிபரப்பாகும்.

ஏற்கனவே ஒரு முறை பாரதியுடன் ஏற்பாடு செய்து கொண்ட திருமணம் நின்று விட்டதால் இந்த முறை பாரதியை எப்படியாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று வெண்பா மாஸ்டர் பிளான் செய்து வருகிறார். இதனை தொடர்ந்து குழந்தைகளான ஹேமாவும் லட்சுமியும் சேர்ந்து பாரதிக்கும் கண்ணம்மாவுக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க போகிறார்கள். இந்த சீரியலை இயக்குனர் இன்னும் அடுத்த 6 மாதத்திற்கு கொண்டு செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here