சௌந்தர்யாவை சந்தேகப்படும் பாரதி, கண்ணம்மாவை புரிந்து கொண்ட லட்சுமி – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

0
சௌந்தர்யாவை சந்தேகப்படும் பாரதி, கண்ணம்மாவை புரிந்து கொண்ட லட்சுமி - இன்றைய
சௌந்தர்யாவை சந்தேகப்படும் பாரதி, கண்ணம்மாவை புரிந்து கொண்ட லட்சுமி - இன்றைய "பாரதி கண்ணம்மா" எபிசோட்!
சௌந்தர்யாவை சந்தேகப்படும் பாரதி, கண்ணம்மாவை புரிந்து கொண்ட லட்சுமி – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், பாரதியை நினைத்து சௌந்தர்யா பெருமைப்பட ஆனால் பாரதி உண்மையாகவே நீங்க தான் என்னை பெற்ற அம்மாவா என கேட்கிறார். பின் லட்சுமி கண்ணம்மா செய்த நல்லதை நினைத்து பார்க்கிறார்.

பாரதி கண்ணம்மா:

இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில், கண்ணம்மாவின் பிறந்தநாளுக்கு சென்றுவிட்டு குடும்பத்துடன் வீட்டிற்கு வர ஹேமாவை அனுப்பிவிட்டு சௌந்தர்யா பாரதியிடம் பேசுகிறார். உன்னை நினைத்தால் எனக்கு மிகவும் சந்தோசமாக இருப்பதாக சொல்ல, நீ கண்ணம்மாவை பற்றி எதுவும் தப்பாக பேசவில்லை. பதிலுக்கு நீ ஒரு சிறு குழந்தைக்கு புரியும் படி சொல்லிவிட்டாய். கண்ணம்மாவை பற்றி தப்பாக ஒரு வார்த்தை கூட இல்லை உன்னை நினைத்தால் மிகவும் பெருமையாக இருக்கு என சொல்ல, லட்சுமியை எனக்கு மிகவும் பிடிக்கும் அதனால் தான் நான் அப்படி பேசினேன்.

TNPSC குரூப் 4 VAO காலிப்பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு – தேர்வுக்கு தயாராவது எப்படி?

அந்த கண்ணம்மா மீது இருக்கும் கரிசனம் இல்லை என சொல்கிறார். பின் சௌந்தர்யாவிடம் உண்மையாகவே நீங்க என்னை பெற்ற தாய் தான என கேட்க சௌந்தர்யா அதிர்ச்சி அடைகிறார். என்னடா பேசுகிறாய் என சௌந்தர்யா கேட்க நீங்க என்னை பெற்ற தாயாக இருந்தால் நான் உங்க பேச்சை கேட்டிருப்பேன் அகில் அப்படி தான் கேட்கிறான் ஆனால் நான் ஏன் கேட்கவில்லை என கேட்கிறார். சௌந்தர்யா DNA டெஸ்ட் எடுத்தால் எல்லாம் தெரிந்துவிடும் என சொல்ல அகில் அவன் எதோ பேசுகிறான் நீங்க ஏன் அம்மா என கேட்கிறார்.

பின் பாரதி வருத்தப்பட்டு பேசி இந்த வீட்டில் எல்லாருடனும் இருந்தும் நான் தனியாக இருப்பதாக சொல்ல ஹேமா அதை கேட்டு வருத்தப்படுகிறார். மறுபக்கம் கண்ணம்மா லக்ஷ்மியை ஏமாற்றியதை நினைத்து வருத்தப்பட அப்போது வடிவு வருகிறார். வடிவு பாரதி பேசியதில் இருந்து உன் மீது எவ்வளவு மரியாதை வைத்திருக்கிறார் என்பது தெரிகிறது. இனிமேல் லட்சுமி உங்களிடம் எதுவும் கேட்காமல் என சொல்ல எனக்கு என்னமோ நம்பிக்கை இல்லை என கண்ணம்மா சொல்கிறார்.

மன வருத்தத்துடன் கலங்கிய ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ஜீவா – அவரே வெளியிட்ட பதிவு! ரசிகர்கள் ஷாக்!

வெண்பா கோபத்துடன் வீட்டிற்கு வர அங்கே என்ன நடந்தது என்பது பற்றி கேள்வி கேட்கிறார் சாந்தி. வெண்பா கண்ணம்மாவை பாராட்டியது பற்றி சொல்ல, சாந்தி அதிர்ச்சி அடைகிறார். அப்போ இன்னும் பாரதிக்கு கண்ணம்மா மீது பாசம் இருக்கிறது என்று தான அர்த்தம். அப்போ நான் செய்தது எல்லாம் வேஸ்ட் தான என கேட்க சாந்தி அப்படி எல்லாம் இருக்காது என சொல்கிறார். நீங்க எதாவது செய்ய வேண்டும் என சாந்தி சொல்ல அப்போது அங்கே மாயாண்டி வருகிறார். அவன் பிறந்தநாளில் நடந்தது பற்றி சொல்ல, நீங்க தான் பாரதி பாரதி என பேசுறீங்க ஆனால் அந்த பக்கம் கண்ணம்மாவை தலையில் தூக்கி வைத்துள்ளதாக சொல்கிறார்.

லட்சுமி கண்ணம்மாவை பார்த்துக் கொண்டு பாரதி சொன்னதை நினைக்க லட்சுமி கண்ணம்மாவை வர சொல்கிறார். பின் லட்சுமி கண்ணம்மாவிற்கு முத்தம் கொடுக்க இப்போது தான் எனக்கு எல்லாம் புரிகிறது. உன்னை பற்றி நான் நினைத்து பார்க்கவே இல்லை நேற்று டாக்டர் அங்கிள் சொன்னதும் தான் எல்லாமே புரிகிறது என சொல்கிறார். எனக்காக எல்லாமே பண்ணிருக்க நான் கேட்டது எல்லாம் வாங்கி கொடுப்ப அதை எல்லாம் நான் நினைத்து கூட பார்க்கவில்லை ஆனால் டாக்டர் அங்கிள் எனக்கு புரிய வைத்துவிட்டார். எல்லார் வீட்டிலையும் அப்பா தான் வெளியே போவாங்க அம்மா வீட்டில் இருப்பாங்க, நம்ம வீட்டில் எல்லாமே நீ தான் பார்க்கிறாய், இனிமேல் அப்பா எங்கே என உன்னை தொல்லை செய்ய மாட்டேன் என லட்சுமி சொல்கிறார். அப்பா எங்கே வேண்டும் என்றாலும் இருக்கட்டும் ஆனால் எனக்கு நீ தான் முக்கியம் என லட்சுமி சொல்கிறார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!