மீண்டும் பாரதி கண்ணம்மாவை பிரிக்க களமிறங்கிய வெண்பா, கண்ணம்மாவிடம் சவால் – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

0
மீண்டும் பாரதி கண்ணம்மாவை பிரிக்க களமிறங்கிய வெண்பா, கண்ணம்மாவிடம் சவால் - இன்றைய
மீண்டும் பாரதி கண்ணம்மாவை பிரிக்க களமிறங்கிய வெண்பா, கண்ணம்மாவிடம் சவால் - இன்றைய "பாரதி கண்ணம்மா" எபிசோட்!
மீண்டும் பாரதி கண்ணம்மாவை பிரிக்க களமிறங்கிய வெண்பா, கண்ணம்மாவிடம் சவால் – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், பாரதிக்கு வெண்பா பற்றிய உண்மை எல்லாம் தெரியும் என சாந்தி வெண்பாவிடம் சொல்கிறார். பின் வெண்பா பாரதியை பார்க்க செல்கிறார்.

பாரதி கண்ணம்மா:

இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில், வெண்பா நான் ஜெயிலில் இருக்கும் போது என்ன நடந்தது என கேட்க, சாந்தி நீங்க ஜெயிலில் இருக்கும் போது பாரதி விவாகரத்து கேட்டு நீதிமன்றம் போனார். அங்கே 6 மாசம் பாரதி கண்ணம்மா சேர்ந்து வாழ வேண்டும் என உத்தரவிட்டனர். அதனால் பாரதி கண்ணம்மா வீட்டில் இருக்கிறார் என சொல்கிறார். உடனே வெண்பா அதெல்லாம் எனக்கு தெரியுமே இன்னைக்கு நான் ஜெயிலில் இருந்து வருவதாக பாரதிக்கு தெரியுமா இல்லையா. அவன் ஏன் வரவில்லை என கேட்கிறார்.

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.2500 பொங்கல் பரிசு – எடப்பாடி பழனிசாமி அறிக்கை!

அப்போது மாயாண்டி அவன் வரமாட்டான், அவனுக்கு உன்னை பற்றிய எல்லா உண்மையும் தெரியும் என சொல்ல, வெண்பா பதட்டம் அடைகிறார். என்ன உண்மை என கேட்க அஞ்சலியை கடத்திய பின் அவளுக்கு நீங்க எழுதி கொடுத்த மருந்து பற்றி தெரிய வந்துள்ளது என சொல்கிறார். பின் பாரதியை பார்க்க வெண்பா செல்ல, அங்கே பாரதி வெண்பாவை முறைத்து பார்க்கிறார். உன்னுடைய தோழி பாரதி என சொல்ல உன்னை பற்றி எல்லாம் தெரியும் எனக்கு அஞ்சலியை கொல்ல உனக்கு எவ்வளவு தைரியம் இருக்கும்.

ஒரு கர்ப்பிணியை பார்த்தால் எல்லாருக்கும் இரக்கம் வரும் ஆனாலும் நீ என்னுடைய மருந்து சீட்டை எடுத்து தவறான மாத்திரைகள் எழுதி கொடுத்து இருக்கிறாய் எனக்கு நம்பிக்கை துரோகம் புதுசு இல்லை. நீயும் அந்த கண்ணம்மாவும் எனக்கு ஒன்னு தான் என சொல்ல, உனக்கு துரோகம் செய்த கண்ணம்மா உடன் சேர்ந்து வாழுகிறாய் என வெண்பா கேட்கிறார். அதை கேட்க நீ யாரு என பாரதி வெண்பாவை திட்டிஅனுப்பிவிடுகிறார். மறுபக்கம் சௌந்தர்யா ஹேமா மற்றும் லட்சுமி உடன் காரில் சென்று கொண்டிருக்க இனிமேல் யாரிடமும் சொல்லாமல் போக கூடாது என சௌந்தர்யா சொல்கிறார்.

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கொட்டித் தீர்க்கும் கனமழை – வானிலை மையம் எச்சரிக்கை!

அந்த நேரம் பாரதி கார் செல்ல, ஹேமா காரை பார்த்து டாடி டாடி என சத்தம் போடுகிறார். பின் அவர் ஏன் சமையல் அம்மா வீட்டு பக்கம் போறார் என கேட்க, நாம சென்று பாப்போம் என சொல்கிறார். உடனே சௌந்தர்யா கோவப்பட்டு வீட்டிற்கு போவோம் என சொல்கிறார். கண்ணம்மா பாரதி லேப்டாப்பை துடைத்து கொண்டிருக்க பாரதி வந்து என்னுடையதை ஏன் எடுக்கிறாய் என கோபப்படுகிறார். வெண்பா பாரதி பேசியதை நினைத்து கோவமாக காரில் வந்து கொண்டிருக்கிறார். கண்ணம்மாவை சும்மா விடமாட்டேன் என நினைத்து வர அந்த பக்கம் கண்ணம்மா வருகிறார்.

அவர் கண்ணம்மாவை பார்த்து நான் ஒரு மாதம் ஊரில் இல்லை ஆளே மாறிட்ட என கேட்கிறார். நீ பாரதி கூட தான இருக்க அப்பறம் என்ன ஜெயிச்சிட்டோம் என திமிரா என கேட்க ஆமாம் திமிரு தான் இப்போ என்ன என கண்ணம்மா கேட்கிறார். உன்னை பாரதி உடன் சேர்ந்து வாழ விடமாட்டோன். நான் ஜெயிலில் இவ்வளவு கஷ்டப்பட்டதற்கு நீ தான் காரணம் என வெண்பா சொல்கிறார். சரி என்ன வேணாலும் பண்ணு நான் என்ன உன்ன மாதிரி தனி ஆள புருஷன் கூட இருக்கேன் நிறைய வேலை இருக்கு நீ கிளம்பு என கண்ணம்மா சொல்ல வெண்பா கோவமாக கிளம்புகிறார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here