லட்சுமியை விட கண்ணம்மா வீட்டிற்கு கிளம்பும் பாரதி – இன்றைய எபிசோட்!

0
லட்சுமியை விட கண்ணம்மா வீட்டிற்கு கிளம்பும் பாரதி - இன்றைய எபிசோட்!
லட்சுமியை விட கண்ணம்மா வீட்டிற்கு கிளம்பும் பாரதி - இன்றைய எபிசோட்!
லட்சுமியை விட கண்ணம்மா வீட்டிற்கு கிளம்பும் பாரதி – இன்றைய எபிசோட்!

இன்று “பாரதி கண்ணம்மா” தொடரில் ஹேமாவை பார்க்க என்று லட்சுமி பாரதி வீட்டிற்கு வருகிறார். லட்சுமியை பாரதி தானே வீட்டிற்கு சென்று விடுவதாக கூறுகிறார். இதனால் சௌந்தர்யா மற்றும் வேணு இருவரும் அதிர்ச்சி அடைந்து விடுகின்றனர்.

“பாரதி கண்ணம்மா”

இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில் அஞ்சலி தனியாக அமர்ந்து மருத்துவர் கூறியது குறித்து யோசிக்கிறார். அப்போது என்று சௌந்தர்யா வந்து அஞ்சலி தனியாக அமர்ந்திருப்பது குறித்து கேட்கிறார். அஞ்சலி எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறார். இதனால் சௌந்தர்யா எந்த பிரச்சனை என்றாலும் அதனை தன்னிடம் தயங்காமல் கூறுமாறும் சொல்லி விட்டு சென்று விடுகிறார். இப்படியாக இருக்க, லட்சுமி ஹேமாவை பார்க்க என்று பாரதியின் வீட்டிற்கு வருகிறார். லட்சுமி வந்ததை பார்த்ததும் வேணு மற்றும் சௌந்தர்யா இருவரும் மகிழ்ச்சி அடைகின்றனர்.

ஆதார் அட்டையில் மொபைல் எண்ணை மாற்றுவது எப்படி? எளிய வழிமுறைகள்!

அப்போது சௌந்தர்யா கண்ணம்மா செய்து கொடுத்து விட்டிருக்கும் உணவுகளை பற்றி கேட்கிறார். இன்னும் சிறிது நாட்களில் ஹேமா அமெரிக்கா செல்ல இருப்பதால் ஹேமாவிற்கு பிடித்த உணவுகளை எடுத்து கொண்டு வந்ததாக கூறுகிறார். இதனால் சௌந்தர்யா நெகிழ்ச்சி அடைந்து விடுகிறார். பின், லட்சுமி மற்றும் ஹேமா இருவரும் சந்தோசமாக பேசி சிரிக்கின்றனர். அப்போது வரும் பாரதி லட்சுமியை பார்த்து ஆச்சரியம் அடைந்து விட்டு கண்ணம்மா செய்து கொடுத்த உணவுகள் குறித்து கேட்கிறார்.

TN Job “FB  Group” Join Now

சிறிது நேரம் யோசிக்கும் லட்சுமி சமையல் அம்மா செய்து கொடுத்தது என்று கூறி விடுகிறார். இதனால் பாரதி எரிச்சல் அடைந்து விடுகிறார். ஹேமாவும் தனது அப்பாவிற்கு பிடிக்கவில்லை என்று நினைத்து கண்ணம்மா செய்த உணவுகளை சாப்பிடவில்லை. பின் லட்சுமி, சௌந்தர்யா, அஞ்சலி மற்றும் வேணு வற்புறுத்தியதால் ஹேமா சாப்பிடுகிறார்.

பின், லட்சுமி கிளம்புவதாக கூறியதும் பாரதி தானே சென்று லட்சுமியை வீட்டில் விட்டு விடுகிறேன் என்று கூறுகிறார். இதனால் சௌந்தர்யா மற்றும் வேணு அதிர்ச்சி அடைந்து விடுகின்றனர். அவரை தடுக்க முயற்சிக்கின்றனர். ஆனாலும், பாரதி சென்று விடுகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிந்து விடுகிறது.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here