லட்சுமி பற்றிய உண்மையை தெரிந்து கொண்ட ஹேமா – ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!

0
லட்சுமி பற்றிய உண்மையை தெரிந்து கொண்ட ஹேமா - 'பாரதி கண்ணம்மா' சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
லட்சுமி பற்றிய உண்மையை தெரிந்து கொண்ட ஹேமா - 'பாரதி கண்ணம்மா' சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
லட்சுமி பற்றிய உண்மையை தெரிந்து கொண்ட ஹேமா – ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் “பாரதி கண்ணம்மா” சீரியலில் இன்று ஹேமாவிற்கு கண்ணம்மா தான் லட்சுமியின் அம்மா என்று தெரிய வருகிறது. அதே போல் கண்ணம்மாவிற்கு ஹேமா மேல் சந்தேகம் வந்து விட்டதால் அவளை இனி கண்ணம்மா வீட்டிற்கு அனுப்ப கூடாது என்று சௌந்தர்யா யோசிக்கிறார்.

“பாரதி கண்ணம்மா” சீரியல்:

விஜய் டிவியில் எப்போதுமே டாப் ரேட்டிங்கில் இருக்கும் சீரியல் என்றால் அது “பாரதி கண்ணம்மா” தான். தெலுங்கில் ஒளிபரப்பான “கார்த்திகை தீபம்” சீரியலின் தமிழ் ரீமேக் தான் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலுக்கு என்று தனி ரசிகர் கூட்டம் தற்போது வரை இருந்து வருகிறது. இந்த சீரியலில் முக்கிய கட்டமாக ஹேமா யாருடைய குழந்தை என்று தெரியாமல் கண்ணம்மா தவிக்கிறார். வெண்பா மற்றும் பாரதிக்கு திருமணம் ஆகவில்லை என்றால், ஹேமா எப்படி வந்தாள் என்று யோசிக்கிறார்.

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” துளசியின் சினிமா வரலாறு – ரசிகர்கள் வாழ்த்து!

இன்று அகிலனிடம் இது குறித்து கேட்கிறார். கண்ணம்மா அப்படி கேட்டதும் அகில் பயந்து கொண்டே, ஹேமா தத்து எடுத்து கொண்ட குழந்தை என்று கூறி சமாளிக்கிறார். பின்னர்,ஹேமா கண்ணம்மா வீட்டிற்கு செல்கிறார். லட்சுமி மற்றும் ஹேமா இருவரும் ஒரே மாதிரி உள்ள உடையை அணிந்து வருகின்றனர். இதனை பார்க்கும் கண்ணம்மாவிற்கு ஹேமா மீது சந்தேகம் அதிகரிக்கிறது. ஹேமா தனது இரட்டை குழந்தைகளில் ஒன்று தான் போல என்று யோசிக்கிறார்.

சரஸ்வதியை பெண் கேட்டு வீட்டிற்கு செல்லும் தமிழ், அசிங்கப்படுத்தும் லிங்கம் – வெளியான ப்ரோமோ!

ஹேமா மற்றும் லட்சுமி இருவரும் நடந்து கொள்வது இரட்டை குழந்தைகள் போல இருப்பதால் மிகவும் குழப்பம் அடைந்து விடுகிறார். அப்போது எதார்த்தமாக லட்சுமி கண்ணம்மாவை அம்மா என்று அழைத்து விடுகிறார். இதனை கேட்டு அதிர்ச்சி அடையும் ஹேமா இது குறித்து அவரிடம் கேட்கிறார். சமையல் அம்மா தனது அம்மா தான் என்று லட்சுமி கூறுகிறார். பள்ளியில் சேர்ப்பதற்காக தான் அவ்வாறு சமையல் அம்மா என்று கூப்பிட சொன்னேன் என்று கூறி விடுகிறார். அதே போல் கண்ணம்மாவிற்கு ஹேமா மேல் சந்தேகம் வந்து விட்டது என்பதனை தெரிந்து கொள்ளும் சௌந்தர்யா இனி ஹேமாவை கண்ணம்மா வீட்டிற்கு அனுப்ப கூடாது என்று முடிவு எடுக்கிறார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!