பிரசவத்துக்கு பின் ‘பாரதி கண்ணம்மா’ வில்லி வெண்பா கலந்து கொண்ட நிகழ்ச்சி – ரசிகர்கள் உற்சாகம்!

0
பிரசவத்துக்கு பின் 'பாரதி கண்ணம்மா' வில்லி வெண்பா கலந்து கொண்ட நிகழ்ச்சி - ரசிகர்கள் உற்சாகம்!
பிரசவத்துக்கு பின் 'பாரதி கண்ணம்மா' வில்லி வெண்பா கலந்து கொண்ட நிகழ்ச்சி - ரசிகர்கள் உற்சாகம்!
பிரசவத்துக்கு பின் ‘பாரதி கண்ணம்மா’ வில்லி வெண்பா கலந்து கொண்ட நிகழ்ச்சி – ரசிகர்கள் உற்சாகம்!

தற்போது ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் வில்லி வெண்பாவாக நடித்து வரும் நடிகை பரினா விஜய் டிவியின் சூப்பர் ஹிட் ரியாலிட்டி நிகழ்ச்சியான ‘ஸ்டார்ட் மியூஸிக்’ இல் கலந்து கொண்டவாறு வெளியிட்ட வீடியோ வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகை பரினா

கடந்த சில எபிசோடுகளாக மீண்டும் சூடு பிடிக்க துவங்கி இருக்கும் விஜய் டிவியின் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் 670 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் நடித்து வரும் ஒவ்வொரு நடிகர், நடிகைகளும் அந்தந்த கதாப்பாத்திரத்திற்கு தேவையான சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருவதால் இந்த சீரியல் மக்களிடம் இருந்து நல்ல வரவேற்புகளை பெற்று வருகிறது. அதே நேரத்தில் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் கதைக்களமும் ஸ்ட்ராங் ஆக இருப்பதால் இதுவும் இந்த சீரியலின் வெற்றிக்கு காரணமாக அமைந்திருக்கிறது.

விஜய் டிவியின் ‘குக் வித் கோமாளி’ ரசிகர்களுக்கு சூப்பர் நியூஸ் – சீசன் 3 புகழ் என்ட்ரி உறுதி!

இதற்கிடையில் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் நடித்து வரும் முக்கியமான நடிகர், நடிகைகள் என அத்தனை பேரும் சின்னத்திரைக்கு புதிய முகங்கள் என்பதால் இந்த சீரியலின் ஷூட்டிங் ஸ்பாட் எப்போதும் கலகலப்பாக காணப்படுவது உண்டு. இது தவிர எப்போதும் வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் நடிகர் அருண், சுகேஷ், ஸ்வீட்டி, லிசா, பரினா அனைவரும் படப்பிடிப்பில் எடுத்துக்கொள்ளும் ரீல்ஸ் வீடியோக்கள், புகைப்படங்கள் என பலவற்றை சமூக வலைதளங்களில் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

‘பாரதி கண்ணம்மா’ அஞ்சலியுடன் இணைந்து ஹேமா செய்த காரியம் – வைரலாகும் வீடியோ!

அந்த வகையில் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இருந்து ஒரு மாத காலம் இடைவேளை எடுத்துக்கொண்டு மீண்டும் அதே வில்லத்தனத்துடன் களமிறங்கி இருக்கும் நடிகை பரினா தற்போது விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோ ஒன்றில் கலந்து கொண்டிருக்கிறார். அதாவது விஜய் டிவியின் சூப்பர் ஹிட் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றான ‘ஸ்டார்ட் மியூஸிக்’ ஷோவில் இந்த வாரம் பாரதி கண்ணம்மா சீரியல் குழுவினர் கலந்து கொண்டுள்ளனர். இதன் படப்பிடிப்பில் வைத்து எடுத்துக்கொண்ட வீடியோ ஒன்றை நடிகை பரினா தனது இன்ஸ்டா ஸ்டோரி பக்கத்தில் வெளியிட அது வைரலாகி வருகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!