தமிழ் சீரியல்களில் முதலிடம் பிடித்த ‘பாரதி கண்ணம்மா’ – ரசிகர்கள் வாழ்த்து மழை!

0
தமிழ் சீரியல்களில் முதலிடம் பிடித்த 'பாரதி கண்ணம்மா' - ரசிகர்கள் வாழ்த்து மழை!
தமிழ் சீரியல்களில் முதலிடம் பிடித்த 'பாரதி கண்ணம்மா' - ரசிகர்கள் வாழ்த்து மழை!
தமிழ் சீரியல்களில் முதலிடம் பிடித்த ‘பாரதி கண்ணம்மா’ – ரசிகர்கள் வாழ்த்து மழை!

தமிழ் சின்னத்திரையில் அனைத்து தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் முதலிடத்தை இடத்தை பிடித்துள்ளது. இதனால் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

பாரதி கண்ணம்மா:

வெள்ளித்திரை படங்களை விட சின்னத்திரை சீரியல்களுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உண்டு. தமிழ் சீரியல்கள் மட்டுமல்லாமல் அனைத்து மொழி சீரியல்களிலும் மக்கள் மனம் கவர்ந்த சீரியல் குறித்த பட்டியல் வெளியாகி உள்ளது. இந்த ஆண்டின் 41-வது வாரத்திற்கான பட்டியலில் விஜய் டிவி பாரதி கண்ணம்மா சீரியல் இடம் பிடித்துள்ளது. மலையாளம், தெலுங்கு, தமிழ், கன்னடம் மொழி சீரியல்களில் மக்கள் மனம் கவர்ந்த சீரியல்கள் இடம் பிடித்துள்ளன.

விஜய் டிவியில் முடிவுக்கு வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல்? ரோஷினி ஹரிப்ரியன் விலகலுக்கான காரணம்!

அதன் படி மலையாள மொழியில் குடும்ப விளக்கு சீரியல் 18.0 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. அதன் பின் தெலுங்கு மொழியில் கார்த்திகை தீபம் 12.91 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. அதே போல தமிழ் மொழியில் பாரதி கண்ணம்மா சீரியல் 10.0 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தில் உள்ளது. கன்னட மொழியில் 9.0 புள்ளிகளுடன் நான்காம் இடத்தை பிடித்துள்ளது. இந்த அனைத்து சீரியல்களும் ஒரே கதை களத்தை சேர்ந்து இருக்கிறது.

சமையல் போட்டி பற்றி சொல்லும் சந்தியா, முடியாது என மறுக்கும் சரவணன் – இன்றைய “ராஜா ராணி 2” எபிசோட்!

மேலும் தமிழில் பாரதி கண்ணம்மா சீரியல் அனைத்து மொழி சீரியல்களிலும் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளதால் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அது மட்டுமில்லாமல் இந்த சீரியல்கள் அவர்களது மொழிகளில் நம்பர் ஒன் சீரியல்களாக இருக்கிறது. இதனையடுத்து பாரதி கண்ணம்மா சீரியலுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த சீரியலில் கண்ணம்மாவாக நடித்து வரும் ரோஷினி ஹரிப்ரியன் விலகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், அதன் கதைக்களத்தில் எவ்வாறு மாற்றம் ஏற்படப் போகிறது என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!