விரைவில் முடிவுக்கு வரும் “பாரதி கண்ணம்மா” சீரியல்? வெளியான சீசன் 2 ப்ரோமோ!
விஜய் டிவியில் பிரபலமான சீரியலான பாரதி கண்ணம்மாவில் பல திருப்பங்கள் தற்போது வெளியாகி உள்ளது. இந்நிலையில், பாரதி கண்ணம்மா சீசன் 2 குறித்த ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது.
பாரதி கண்ணம்மா:
பாரதி கண்ணம்மா சீரியலில், பல திருப்பங்களுடன் கதை சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் தனது இரண்டாவது குழந்தை பற்றி தெரிந்து கொண்ட கண்ணம்மா அனைவரிடமும் கேட்டு பார்க்கிறார். முதலில் சௌந்தர்யாவிற்கு குழந்தை பற்றி தெரியும் என கண்ணம்மா அவரிடம் கேட்கிறார். ஹேமா என்னை போலவே இருக்கிறாள் அவள் தான் என்னுடைய குழந்தையா என கேட்கிறார். ஆனால் சௌந்தர்யா இல்லை அவளை தத்து எடுத்து வந்து வளர்க்கிறோம் என சொல்ல அதனை நம்பாத கண்ணம்மா அகில், அஞ்சலி, துளசி என அனைவரிடமும் கேட்கிறார்.
பாக்கியாவை வீட்டை விட்டு வெளியே தள்ளும் கோபி, பணத்தை மீட்டு வரும் எழில் – வெளியான ப்ரோமோ!
ஆனால் யாரும் தெரியாது என சொல்ல வெண்பா என்னிடம் தான் குழந்தை இருக்கிறது. அவளை பிச்சை எடுக்க வைக்கிறேன் என சொல்கிறார். கண்ணம்மா என் குழந்தையை கொடுத்துவிடு என கெஞ்ச, அப்போ பாரதியை விவாகரத்து செய்தால் தான் குழந்தையை கொடுப்பேன் என சொல்ல கண்ணம்மா விவாகரத்து செய்ய இருக்கிறார். அந்த நேரம் பார்த்து சௌந்தர்யா வந்து ஹேமா தான் உன்னுடைய குழந்தை என சொல்கிறார். உடனே கண்ணம்மா ஹேமாவை நினைத்து கதறி அழுகிறார்.
வெண்பாவுடன் மீண்டும் இணைந்த பாரதி, சீரியலில் புதிய ட்விஸ்ட் – ‘பாரதி கண்ணம்மா’ ரசிகர்கள் ஷாக்!
இப்படி பல திருப்பங்கள் வெளியாகி வரும் நிலையில், பாரதி கண்ணம்மா சீரியல் விரைவில் முடிய இருப்பதாகவும், 8 வருடங்களுக்கு பின் இரண்டாவது சீசன் தொடங்க இருப்பதாக ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் லட்சுமி ஹேமா பெரியவர்களாக மாறி நடிப்பது போல காட்டப்பட்டுள்ளது. இதை போலவே தான் தற்போது ‘மௌன ராகம்’ சீரியல் ஒளிபரப்பாகி வருவதால், ‘பாரதி கண்ணம்மா’ சீரியலும் இது போலவே ஒளிபரப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ரசிகர்கள் பாரதி கண்ணம்மா விரைவில் முடிய இருக்கிறதா என வருத்தத்தில் இருக்கின்றனர்.
எனக்கென்னமோ 8 வருடங்களுக்குப் பிறகு கண்ணம்மா உருவத்திலேயே ஹேமாவும் இருப்பாள் என்று தோன்றுகிறது.
So, கண்ணம்மாவாக வாழும் (நடிக்கும்) மிஸ். ரோஷினி ஹரிப்ரியன் அவர்கள் dual ரோலில் நடிப்பார்கள் என்று பெருமையாக இருக்கிறது.
வாழ்க மாதர் குல மாணிக்கம், என் அருமை தங்கை கண்ணம்மா !
– V. Sukhavana Vidhya
10.10.21