“பாரதி கண்ணம்மா” சீரியலில் மாமியாருடன் இணைந்த கண்ணம்மா – வைரலாகும் புகைப்படம்!

0
"பாரதி கண்ணம்மா" சீரியலில் மாமியாருடன் இணைந்த கண்ணம்மா - வைரலாகும் புகைப்படம்!
“பாரதி கண்ணம்மா” சீரியலில் மாமியாருடன் இணைந்த கண்ணம்மா – வைரலாகும் புகைப்படம்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், வெண்பா கெட்டவள் என பாரதிக்கு தெரிய வருகிறது. இந்நிலையில் கண்ணம்மா மீது தவறு இல்லை என விரைவில் பாரதிக்கு தெரிய வரும். தற்போது மாமியாருடன் கண்ணம்மா எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

பாரதி கண்ணம்மா:

பாரதி கண்ணம்மா சீரியல் பல எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வந்தாலும் மக்கள் மனம் கவர்ந்த சீரியல்களில் ஒன்றாக இருக்கிறது. காரணம் கதை மற்றும் எதிர்பாராத நேரங்களில் ஏற்படும் திருப்பங்கள் தான். தற்போது பாரதி கண்ணம்மா சேர்ந்து வாழ தொடங்கிய நிலையில் பாரதி முதலில் பிடிக்காமல் தான் இருந்தார். ஆனால் கண்ணம்மாவின் நேர்மையை நாளுக்கு நாள் பார்க்கும் பாரதிக்கு கண்ணம்மா தவறு செய்திருக்க மாட்டாள் என நினைக்க தோன்றுகிறது.

விஜய் டிவி ‘குக் வித் கோமாளி’ சீசன் 3 போட்டியாளர்கள் யார் யார் தெரியுமா? லீக்கான லிஸ்ட்!

மறுபக்கம் வெண்பா ஜெயிலில் இருந்து வந்தாலும் அஞ்சலியை கொலை செய்ய திட்டமிட்டது தெரிந்து அவர் மீது பாரதி கோவமாக இருக்கிறார். மேலும் வெண்பா மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டதால் வெண்பா எவ்வளவு கெட்டவள் என பாரதி உணருகிறார். அதனால் கண்ணம்மா மீது அவருக்கு நல்ல எண்ணம் வர தொடங்குகிறது. இந்நிலையில் பாரதி வீட்டில் நடக்க இருக்கும் பூஜையில் எதாவது திருப்பம் வெளியே வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கண்ணம்மா கர்ப்பமாக இருப்பது போல புகைப்படம் வெளியானது

பாக்கியாவிடம் கடுமையாக நடந்து கொண்ட கோபி,தாத்தாவிடம் கோபி பற்றி உண்மையை சொன்ன எழில் – இன்றைய எபிசோட்!

அது பாரதி கண்ணம்மாவின் பழைய நினைவுகள் என இன்றைய எபிசோடில் தெளிவாக தெரிந்துள்ளது. தற்போது கண்ணம்மா அவரது மாமியார் சௌந்தர்யாவுடன் எடுத்த புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது. அது சௌந்தர்யா வீட்டில் பூஜை நடக்கும் போது எடுத்த புகைப்படம் போல தெரிகிறது. மேலும் மறுபக்கம் அகில் அஞ்சலியை கடத்தியவனை தேடி அலைவதால் மாயாண்டி அகிலை கொல்ல முடிவு செய்கிறார். அதனால் இனி வரும் எபிசோடுகளில் விறுவிறுப்பு அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!