‘ராஜா ராணி 2’ சித்துவுடன் இணையும் பாரதி கண்ணம்மா ரோஷினி? ‘நம்ம வீட்டு மாப்பிள்ளை’ சீரியல்! ரசிகர்கள் ஷாக்!

0
'ராஜா ராணி 2' சித்துவுடன் இணையும் பாரதி கண்ணம்மா ரோஷினி? 'நம்ம வீட்டு மாப்பிள்ளை' சீரியல்! ரசிகர்கள் ஷாக்!
'ராஜா ராணி 2' சித்துவுடன் இணையும் பாரதி கண்ணம்மா ரோஷினி? 'நம்ம வீட்டு மாப்பிள்ளை' சீரியல்! ரசிகர்கள் ஷாக்!
‘ராஜா ராணி 2’ சித்துவுடன் இணையும் பாரதி கண்ணம்மா ரோஷினி? ‘நம்ம வீட்டு மாப்பிள்ளை’ சீரியல்! ரசிகர்கள் ஷாக்!

விஜய் டிவியின் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் மூலம் பிரபலமடைந்த நடிகை ரோஷினி ஹரிப்ரியன் தற்போது ‘ராஜா ராணி 2’ நடிகர் சித்துவுடன் இணைந்து ‘நம்ம வீட்டு மாப்பிள்ளை’ என்ற புத்தம் புதிய சீரியல் ஒன்றில் நடிக்க இருப்பதாக வெளியாகி இருக்கும் ப்ரோமோ ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

நடிகை ரோஷினி:

சமீப காலமாக தமிழ் டிவி சேனல்களில் பல புதிய சீரியல்களின் அணிவகுப்பு காணப்பட்டு வருகிறது. அந்த வகையில் டிவி சீரியல்கள் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்திருக்கும் விஜய், ஜீ தமிழ், கலர்ஸ், சன் ஆகிய முன்னணி தமிழ் சேனல்கள் பலவும் புத்தம் புதிய சீரியல்களை களமிறக்கி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. இது ஒரு புறம் இருக்க, மறுபக்கத்தில் 700 அல்லது 800 எபிசோடுகளை கடந்த பல சூப்பர் ஹிட் சீரியல்களில் நடித்து வரும் முக்கிய நடிகர், நடிகைகள் சீரியல்களை விட்டு விலகி வருகின்றனர். இதில் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் கடந்த சில மாதங்களாக விஜய் டிவி சீரியல்கள் நட்சத்திரங்கள் பலர் சீரியல்களில் இருந்து விலகி இருக்கின்றனர்.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் ஏற்படப்போகும் புதிய மாற்றம்? தனமாக அறிமுகமாகும் பாக்கியலட்சுமி சுசித்ரா!

இந்த மாற்றம் அவசியமானது என்றாலும், ஒரு கதாப்பாத்திரத்தில் ஒருவரை மட்டுமே பார்த்து ரசித்த ரசிகர்களுக்கு இது வருத்தத்தை கொடுக்க கூடியதாக இருப்பது மறுக்க முடியாத உண்மையாகும். அந்த வகையில் சமீபத்தில் விஜய் டிவியின் ‘பாரதி கண்ணம்மா’ என்ற சூப்பர் ஹிட் சீரியல்களில் நடித்து மக்கள் மத்தியில் ஏகப்பட்ட வரவேற்புகளை பெற்றிருந்த நடிகை ரோஷினி ஹரிப்ரியன் தீடீரென இந்த சீரியலை விட்டு விலகினார். இப்போது ரோஷினி நடித்து வந்த கண்ணம்மா கதாப்பாத்திரத்தில் அவருக்கு பதிலாக வினுஷா என்பவர் நடித்து கொண்டிருக்கிறார்.

கோபியின் விவாகரத்து திட்டத்தை கண்டுபிடித்த எழில், மாட்டிக் கொண்ட கோபி – “பாக்கியலட்சுமி” சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!

இப்படி இருக்க ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இருந்து விலகிய நடிகை ரோஷினி மீண்டும் புத்தம் புதிய சீரியல் ஒன்றில் நடிக்க இருப்பதாக ஷாக்கிங் ப்ரோமோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கிறது. அதாவது, விஜய் டிவியில் ‘நம்ம வீட்டு மாப்பிள்ளை’ என்ற புத்தம் புதிய சீரியல் எடுக்கப்பட்டு வருவதாகவும், இதில் நடிகை ரோஷினிக்கு ஜோடியாக ‘ராஜா ராணி 2’ புகழ் சித்து நடிக்க இருப்பதாகவும் சில எடிட் செய்யப்பட்ட காட்சிகள் அந்த ப்ரோமோவில் இடம்பிடித்துள்ளது. இது வெறும் எடிட் செய்யப்பட்ட ப்ரோமோவாக இருந்தாலும் அது ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!