குக் வித் கோமாளியில் மாஸ் என்ட்ரி கொடுத்த ‘பாரதி கண்ணம்மா’ ரோஷினி – ரசிகர்கள் உற்சாகம்!

0
குக் வித் கோமாளியில் மாஸ் என்ட்ரி கொடுத்த 'பாரதி கண்ணம்மா' ரோஷினி - ரசிகர்கள் உற்சாகம்!
குக் வித் கோமாளியில் மாஸ் என்ட்ரி கொடுத்த 'பாரதி கண்ணம்மா' ரோஷினி - ரசிகர்கள் உற்சாகம்!
குக் வித் கோமாளியில் மாஸ் என்ட்ரி கொடுத்த ‘பாரதி கண்ணம்மா’ ரோஷினி – ரசிகர்கள் உற்சாகம்!

விஜய் டிவி ‘குக் வித் கோமாளி’ சீசன் 3 நிகழ்ச்சியில் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் நடிகை ரோஷினி ஹரிப்ரியன் குக் ஆக கலந்து கொள்ள இருக்கும் நிலையில், இவரது மாஸ் என்ட்ரி குறித்த வீடியோ ஒன்று வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது.

குக் வித் கோமாளி

தமிழ் சின்னத்திரை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த ‘குக் வித் கோமாளி’ சீசன் 3 நிகழ்ச்சி அடுத்த வாரம் முதல் ஒளிபரப்பாக இருக்கிறது. விஜய் டிவியில் கடந்த 2 சீசன்களாக ஒளிபரப்பப்பட்ட இந்த ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சிக்கு கிடைத்த ஏகப்பட்ட வரவேற்புகளை அடுத்து இதன் அடுத்த சீசன் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் காத்து கிடந்தனர். அந்த வகையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக வரும் ஜனவரி 22ம் தேதி முதல் ‘குக் வித் கோமாளி’ சீசன் 3 ஒளிபரப்பாக உள்ளது.

“அபி டெய்லர்” சீரியலில் களமிறங்கும் “பாரதி கண்ணம்மா” வெண்பா – ரசிகர்கள் உற்சாகம்!

இது தொடர்பான ப்ரோமோ ஒன்று வெளியாகி வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் விஜய் டிவியின் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் கண்ணம்மாவாக நடித்திருந்த நடிகை ரோஷினி ஹரிப்ரியன் இந்த ‘குக் வித் கோமாளி’ சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கிறார். இது தொடர்பான தகவல்கள் வலைதளங்களில் வெளியான வண்ணம் இருந்த நிலையில் இந்த தகவல் தற்போது உறுதியாகி இருக்கிறது. அந்த வகையில் நடிகை ரோஷினி ‘குக் வித் கோமாளி’ சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் விதமாக ப்ரோமோ ஒன்று தற்சமயம் வெளியாகி இருக்கிறது.

கண்ணம்மாவை மனைவியாக ஏற்றுக் கொள்ளும் பாரதி – சீரியலில் அடுத்த ட்விஸ்ட்! ரசிகர்கள் உற்சாகம்!

அதில் வைரல் பாடல் ஒன்றுக்கு மாஸ் என்ட்ரி கொடுத்த ரோஷினி, சமையலையும் சிறப்பாக செய்கிறார். அந்த வகையில் இதுவரை ரோஷினியை கண்ணம்மாவாக ரசித்து வந்த மக்கள், அவரை ரோஷினியாக அறிந்து கொள்ள இந்த நிகழ்ச்சி ஏதுவாக அமையும் என்று ரசிகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதே வேளையில், ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் கண்ணம்மாவை மிஸ் செய்து வந்த ரசிகர்கள் ‘குக் வித் கோமாளி’ சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் ரோஷினியை கண்டத்தில் மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!