‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இருந்து விலகும் அஞ்சலி? அவரே வெளியிட்ட பதிவு!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் டாப் சீரியல்களில் ஒன்றான பாரதி கண்ணம்மாவில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை கண்மணி (அஞ்சலி) இன்ஸ்டாவில் வெளியிட்ட பதிவால் அவர் இந்த சீரியலை விட்டு விலக போகிறாரா? என்ற குழப்பம் எழுந்துள்ளது.
பாரதி கண்ணம்மா:
சின்னத்திரையில் விஜய் டிவி சீரியல்களுக்கு மக்கள் மத்தியில் தனி இடம் உண்டு. என்ன தான் தொலைக்காட்சி நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு சீரியல்களை ஒளிபரப்பினாலும் மாறுபட்ட கதைக்களத்துடன் மக்கள் மனதில் எளிதாக நிற்கும் கதாபாத்திரங்களுடன் விஜய் டிவி சீரியல்கள் உள்ளது. அதில் முக்கியமாக டாப் சீரியல் வரிசையில் தொடர்ந்து முன்னிலையில் இருக்கும் பாரதி கண்ணம்மா சீரியலுக்கு மக்களிடம் அதிக வரவேற்பு உள்ளது.
கண்ணன், ஐஸ்வர்யாவின் நிலைமையை கண்டு சந்தோசப்படும் பிரஷாந்த் – அடுத்த எபிசோட்!
காதலித்து திருமணம் செய்த கணவன் மனைவிக்கு கர்ப்ப காலத்தில் வில்லி செய்த வேலையால் இருவரும் பிரியும் நிலை உள்ளது. பின்னர் ஹீரோயின் (கண்ணம்மா) இரட்டை குழந்தைகளை பெற்றெடுக்கிறார். அதில் ஒரு குழந்தை அம்மாவிடமும், மற்றொரு குழந்தை அப்பாவிடமும் வளர்கிறது. 8 வருடங்களுக்கு பின்னர் கதை மீண்டும் தொடர்கிறது. இந்நிலையில் தற்போது இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரமான அஞ்சலியாக நடிக்கும் கண்மணி ஒரு புதிய பதிவை இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார்.
TN Job “FB
Group” Join Now
அதில் அகிலனுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து இனிமேல் இப்படி இருக்க முடியாது என பதிவு செய்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் இவர் இந்த கதாபாத்திரத்தில் இருந்து விலகப் போறாரா? என கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் அவருக்கு குழந்தை பிறந்து அவர் இறந்து விட்டதாக கதை மாற வாய்ப்புள்ளதால் அப்படி போட்டுள்ளாரா? என கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து வரப்போகும் எபிசோடுகளில் தெரிந்து கொள்ளலாம்.