கண்ணன், ஐஸ்வர்யாவின் நிலைமையை கண்டு சந்தோசப்படும் பிரஷாந்த் – அடுத்த எபிசோட்!

0
கண்ணன், ஐஸ்வர்யாவின் நிலைமையை கண்டு சந்தோசப்படும் பிரஷாந்த் - அடுத்த எபிசோட்!
கண்ணன், ஐஸ்வர்யாவின் நிலைமையை கண்டு சந்தோசப்படும் பிரஷாந்த் - அடுத்த எபிசோட்!
கண்ணன், ஐஸ்வர்யாவின் நிலைமையை கண்டு சந்தோசப்படும் பிரஷாந்த் – அடுத்த எபிசோட்!

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் ஒளிபரப்பாக இருக்கும் புதிய எபிசோடில் வீட்டை விட்டு துரத்தப்பட்ட கண்ணன் மற்றும் ஐஸ்வர்யாவின் ஆதரவற்ற நிலையை கண்டு, அவர்களை பழி வாங்க வரும் பிரசாந்த் ஏளனமாக பேசி சண்டையிட முயற்சிப்பதாக தெரிகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

விஜய் டிவியில் தற்போது விறுவிறுப்பாக நகர்ந்து கொண்டிருக்கும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் கண்ணன் மற்றும் ஐஸ்வர்யாவின் திருமணத்தை ஏற்காத இரு குடும்பத்தாரும் அவர்களை வீட்டை விட்டு வெளியே துரத்துகிறார்கள். இதனால் அண்ணன், தம்பிகள் என்று ஒன்றாக இருந்த கூட்டு குடும்பத்தில் ஏற்பட்டிருக்கும் விரிசலை கண்டு ஊர் மக்கள் வசைபாடுகிறார்கள். வீட்டில் என்னதான் ஒருவருக்கு ஒருவர் மாற்றி, மாற்றி ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்தாலும், கண்ணனின் பிரிவை எண்ணி முழு குடும்பமும் பரிதவித்து கொண்டிருக்கிறது.

ஆகஸ்ட் 31 வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு – நாளை முதல் அமல்!

இது ஒரு புறம் இருக்க, மறுபக்கத்தில் தங்குவதற்கு வீடு இல்லாமல் அல்லாடிய கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா ஜோடிக்கு அவரது நண்பர் அடைக்கலம் கொடுக்கிறார். ஆனால் அந்த நண்பரது தயார், அவர்களை உடனடியாக வீட்டில் இருந்து வெளியேறும்படி சொல்லி இருக்கிறார். இதற்கு பின்னாக ஐஸ்வர்யாவின் பாட்டி வீட்டுக்கு இருவரும் கிளம்பும் போது கோபத்துடன் அங்கு வரும் பிரசாந்த், அவர்களின் ஆதரவற்ற நிலைமையை கண்டு ஏளனமாக பேசி, தன்னை ஏமாற்றியதற்காக அவர்களுக்கு கிடைக்கும் தண்டனை தான் இது எனவும் சண்டையிருக்கிறான்.

தமிழகத்தில் ரூ.100க்கு கீழ் குறைந்த பெட்ரோல் விலை – இன்று முதல் அமல்!

இதனிடையே கண்ணன் திருமணத்துக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் கிடைத்த ஒரே ஒரு ஆதரவு மீனா தான். கண்ணன் அவனுக்கு பிடித்த பெண்ணை தான் திருமணம் செய்தான் என கூறி, மூர்த்தி மற்றும் ஜீவாவிடம் பரிந்து பேசுகிறார். இடையில் அழுதுகொண்டே இருக்கும் லட்சுமியை சமாதானப்படுத்தி அவரை சாப்பிட வைக்க முற்படுகிறார்கள் தனம் மற்றும் பார்வதி. இப்படி சோகமான காட்சிகளுடன் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலின் அடுத்த எபிசோட் இவ்வகையான கதைக்களத்துடன் பயணிக்கும் என தெரிகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!