‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இருந்து விலகிய ரோஷினியின் ஒரு நாள் சம்பளம் இவ்வளவா? ரசிகர்கள் ஷாக்!

0
'பாரதி கண்ணம்மா' சீரியலில் இருந்து விலகிய ரோஷினியின் ஒரு நாள் சம்பளம் இவ்வளவா? ரசிகர்கள் ஷாக்!
'பாரதி கண்ணம்மா' சீரியலில் இருந்து விலகிய ரோஷினியின் ஒரு நாள் சம்பளம் இவ்வளவா? ரசிகர்கள் ஷாக்!
‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இருந்து விலகிய ரோஷினியின் ஒரு நாள் சம்பளம் இவ்வளவா? ரசிகர்கள் ஷாக்!

விஜய் டிவியில் தற்போது பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் நடித்த நடிகை ரோஷினி ஹரிப்ரியன் சீரியலில் ஒரு நாள் பெரும் சம்பளம் பற்றிய விவரங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அது குறித்து இந்த பதிவில் காணலாம்.

நடிகை ரோஷினி ஹரிப்ரியன்

இன்றைய காலகட்டத்தில் ரசிகர்கள் பலரும் சீரியல்களை தான் விரும்பி பார்க்கின்றனர். திரைப்படங்களை விட சீரியல்களில் தான் எதிர்பாராத திருப்பங்கள் மற்றும் ட்விஸ்டுகள் இருக்கின்றது. அந்த வகையில் ரசிகர்களுக்கு பிடித்த கதை அம்சத்துடன் இருக்கும் சீரியல்களை ஒளிபரப்பி வருகிறது, விஜய் டிவி. அதில் பல சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டாலும், ரசிகர்களை மிகவும் கவர்ந்த சீரியல் என்றால் அது, பாரதி கண்ணம்மா தான். தெலுங்கில் ஒளிபரப்பாகி வரும் ‘கார்த்திகை தீபம்’ சீரியலின் தமிழ் ரீமேக் தான் இந்த சீரியல்.

‘பாரதி கண்ணம்மா’ நடிகை ரோஷினிக்கு பதில் களமிறங்கிய வினுஷா தேவி – வைரலாகும் புகைப்படம்!

மிகவும் எதார்த்தமான கதைக்களத்தினை கொண்டு இந்த சீரியல் ஒளிபரப்பப்பட்டு வருவதால் ரசிகர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகின்றனர். இந்த சீரியலில் கதாநாயகி கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடிகை ரோஷினி ஹரிப்ரியன் நடித்து வருகிறார். இவர் ஒரு சில தமிழ் குறும்படங்களில் நடித்து இருக்கிறார். சீரியலில் இவருக்கு ‘பாரதி கண்ணம்மா’ தான் முதல் அனுபவமாம். ஆனால், அவரது நடிப்பு இந்த சீரியலில் ஒப்பற்றதாக இருக்கும் என்று தான் கூற வேண்டும்.

ப்ரியங்கா, நிரூப்பிற்கு இடையில் வெடிக்கும் சண்டை – ரசிகர்கள் அதிர்ச்சி! வெளியான பிக்பாஸ் ப்ரோமோ!

தற்போது இவருக்கு பல திரைப்பட வாய்ப்புகள் தொடர்ந்து வந்ததால் இவரால் சீரியலில் கவனம் செலுத்த முடியாமல் போய் விட்டது. இதன் எதிரொலியாக தற்போது சீரியலை விட்டு விலக இருக்கிறார் என்ற தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்து நடிகை ரோஷினி தரப்பில் இருந்து எந்த வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இந்நிலையில் இந்த சீரியலில் நடிகை ரோஷினி ஹரிப்ரியன் பெறும் சம்பளம் பற்றிய விவரங்கள் வெளியாகி உள்ளது. அதன்படி அவர் ஒரு நாளைக்கு அவர் சம்பளமாக 15 ஆயிரம் ரூபாய் பெற்று இருக்கிறார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!