கண்ணம்மா ரோஷினியை மிஸ் செய்யும் பாரதி? ரசிகர்களின் கேள்விக்கு நடிகர் அருண் பிரசாத் அளித்த பதில்!

0
கண்ணம்மா ரோஷினியை மிஸ் செய்யும் பாரதி? ரசிகர்களின் கேள்விக்கு நடிகர் அருண் பிரசாத் அளித்த பதில்!
கண்ணம்மா ரோஷினியை மிஸ் செய்யும் பாரதி? ரசிகர்களின் கேள்விக்கு நடிகர் அருண் பிரசாத் அளித்த பதில்!
கண்ணம்மா ரோஷினியை மிஸ் செய்யும் பாரதி? ரசிகர்களின் கேள்விக்கு நடிகர் அருண் பிரசாத் அளித்த பதில்!

விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இருந்து நடிகை ரோஷினி தற்சமயம் விலகி இருக்கும் நிலையில், சீரியல் படப்பிடிப்பின் போது அவரை மிஸ் செய்வதாக நடிகர் அருண் பிரசாத் தனது ரசிகர்களுடனான லைவ் சேட் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

நடிகர் அருண்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் தற்போது புதிய கண்ணம்மாவுடன் விறுவிறுப்பாக வெளியாகி கொண்டிருக்கிறது. இதுவரை எதிரும், புதிருமாக சண்டை போட்டு வந்த பாரதியும் கண்ணம்மாவும் தற்போது ஒரே வீட்டில் ஒன்றாக வசிக்க நேரிட்டுள்ளது. இப்போது கண்ணம்மா வீட்டிலும் வைத்து அவருடன் சண்டை போட்டு வரும் பாரதிக்கு விரைவில் மனமாற்றம் ஏற்படும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது.

சமையல் போட்டியில் தடுமாறும் சரவணன், சந்தியாவின் மாஸ்டர் பிளான் – இன்றைய “ராஜா ராணி 2” எபிசோட்!

இப்படி இருக்க ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் கண்ணம்மா கதாப்பாத்திரத்தில் நடித்து வந்த நடிகை ரோஷினி அந்த சீரியலை விட்டு விலகிய பிற்பாடு, இப்படிப்பட்ட காட்சிகளுடன் புதிய கதைக்களம் வெளியாக அது ரோஷினியின் ரசிகர்களுக்கு சற்று வருத்தத்தை கொடுத்துள்ளது. ஏறக்குறைய 10 எபிசோடுகளில் புதிய கண்ணம்மாவாக நடிகை வினுஷா தோன்றி வரும் நிலையில், இந்த காட்சிகளில் ரோஷினி நடித்திருந்தால் நன்றாக இருக்கும் என்கிற எண்ணம் பலருக்கும் இருந்து வருகிறது.

இப்படி, ஒவ்வொரு காட்சிகளிலும் ரோஷினியை கண்ணம்மாவாக ரசித்து வந்த ரசிகர்களுக்கு அவரது விலகல் சற்று அதிர்ச்சியை கொடுத்திருக்க பாரதியாக அவருடன் நடித்திருந்த நடிகர் அருண் பிரஷாத் ரோஷினியின் விலகல் குறித்த தனது வருத்தத்தையும் தெரிவித்துள்ளார். அந்த வகையில் தற்போது மணாலி பகுதிக்கு சுற்றுலா சென்றிருக்கும் நடிகர் அருண் பிரசாத், நேற்று தனது பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுடன் லைவ் சேட்டில் உரையாடி இருக்கிறார்.

அமிர்தா குழந்தையின் உயிரை காப்பாற்றி தன் காதலை சொன்ன எழில், வீடு திரும்பிய கோபி – இன்றைய எபிசோட்!

தனது பிறந்தநாளுக்கு வாழ்த்து சொன்ன அனைவருக்கும் நன்றி தெரிவித்த நடிகர் அருண், ரசிகர்கள் கேட்ட சில கேள்விகளுக்கு உற்சாகமாக பதில் அளித்துள்ளார். அந்த வகையில் ‘பாரதி கண்ணம்மா’ நடிகை ரோஷினி ஹரிப்ரியனை மிஸ் செய்கிறீர்களா என ரசிகர் ஒருவர் கேள்வி கேட்க, ஆமாம் கண்டிப்பாக மிஸ் செய்கிறேன் என்று கூறிய அவர், ரோஷினிக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களையும் பகிர்ந்து கொண்டார். இந்த வீடியோ தற்போது ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!