“பாரதி கண்ணம்மா” சீரியல் பிரபலத்திற்கு ஒரு நாள் சம்பளம் இவ்வளவா? வெளியான தகவல்!

0
"பாரதி கண்ணம்மா" சீரியல் பிரபலத்திற்கு ஒரு நாள் சம்பளம் இவ்வளவா? வெளியான தகவல்!
“பாரதி கண்ணம்மா” சீரியல் பிரபலத்திற்கு ஒரு நாள் சம்பளம் இவ்வளவா? வெளியான தகவல்!

பாரதி கண்ணம்மா சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் அருண் பிரசாத் திரைப்பயணத்தை பற்றி இந்த பதிவில் காணலாம்.

“பாரதி கண்ணம்மா” சீரியல்

விஜய் தொலைக்காட்சியில் தற்போது மக்கள் மத்தியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் என்றால் அது பாரதி கண்ணம்மா தான். இந்த சீரியலில் நடித்து வரும் அனைத்து நடிகர் மற்றும் நடிகைகளுக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. குறிப்பாக, இந்த சீரியலில் நாயகன் பாரதிக்கு என்று பெண் ரசிகைகள் ஏராளம் என்று தான் கூற வேண்டும்.

Covaxin தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் கவனத்திற்கு – செப்டம்பர் இறுதிக்குள் ஒப்புதல்!

ஆரம்பத்தில் இருந்தே பாரதி கண்ணம்மாவை பல தருணங்களில் இவர் ஆதரவளித்தது, குடும்பத்தினர் எதிர்த்தும் தனது காதலுக்காக நின்றது என்று அனைத்து காட்சிகளிலும் பாரதி தனக்கு என்று ஒரு அடையாளத்தினை ஏற்படுத்தி கொண்டார். திரையில் பாரதி எப்படியோ அதே போல தான் அவரது சொந்த வாழ்க்கையிலும். நடிகர் அருண் சேலம் மாவட்டத்தில் ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தினை சேர்ந்தவர். சென்னை கிறித்தவக் கல்லூரியில் விஷூவல் கம்யூனிகேஷன் படிப்பினை படித்துள்ளாராம்.

அதனால் அது தொடர்பான பணிகளையே அவர் மேற்கொண்டு வந்துள்ளார். தனது நண்பர்களுடன் இணைத்து பல குறும்படங்களில் கூட அருண் நடித்துள்ளார். இவர் ஒரு நல்ல திருப்பமாக ஏனோ வானிலை மாறுதே, மதி மயங்கினேன், கள்ளன், ஏதோ மாயம் செய்தாய், யானும் தீயவன், பகல் கனவு ஆகிய குறும்படங்கள் இருந்துள்ளது. அப்போது இவருக்கு வைபவ் நடித்த “மேயாத மான்” திரைப்படத்தில் அவருக்கு நண்பராக நடிக்க வாய்ப்பு கிடைத்ததாம்.

செப்.25 வரை இரவு ஊரடங்கு நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!

அதன் பிறகு “பாரதி கண்ணம்மா” சீரியலில் நடிப்பதற்கான வாய்ப்பும் கிடைத்துள்ளது அருணுக்கு. ஆனால், வெள்ளித்திரையில் அறிமுகமாகி விட்டு சின்னத்திரையில் நடிக்க அருண் யோசித்துள்ளார். பின்னர், தெளிவான முடிவுடன் “பாரதி கண்ணம்மா” சீரியலில் அறிமுகமாகி தற்போது பல ரசிகர்களை தன் பால் கவர்ந்திழுத்துள்ளார். இந்த சீரியலில் நடிப்பதற்காக இவர் ஒரு நாளைக்கு 20 ஆயிரம் ரூபாய் சம்பளமாக வாங்குகிறாராம். தற்போது சீரியல் நடிகராக இருக்கும் அருண் அடுத்து வெள்ளித்திரையில் நடிகராக முயற்சி எடுத்து வருகிறாராம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!