‘பாரதி கண்ணம்மா’ சீரியல் நடிகர், நடிகைகளின் ஒருநாள் சம்பளம் – ரசிகர்கள் ஷாக்!

0
'பாரதி கண்ணம்மா' சீரியல் நடிகர், நடிகைகளின் ஒருநாள் சம்பளம் - ரசிகர்கள் ஷாக்!
'பாரதி கண்ணம்மா' சீரியல் நடிகர், நடிகைகளின் ஒருநாள் சம்பளம் - ரசிகர்கள் ஷாக்!
‘பாரதி கண்ணம்மா’ சீரியல் நடிகர், நடிகைகளின் ஒருநாள் சம்பளம் – ரசிகர்கள் ஷாக்!

விஜய் தொலைக்காட்சியில் டாப் சீரியலாக ஒளிபரப்பாகி வருகிறது பாரதி கண்ணம்மா சீரியல். இதில் நடிகர் மற்றும் நடிகைகளின் சம்பளம் குறித்த தகவல் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அது குறித்து இந்த பதிவில் காணலாம்.

‘பாரதி கண்ணம்மா’ சீரியல்

விஜய் டிவியில் கடந்த சில வருடங்களாக ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலுக்கு என்று தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது என்று தான் கூற வேண்டும். தற்போது இந்த சீரியலில் முக்கிய கட்டமாக பாரதி தான் கண்ணம்மாவிற்கு பிரசவம் பார்த்த விஷயத்தினையும், ஒரு குழந்தை தான் பிறந்தது என்ற உண்மையினையும் கூறுகிறார். இதனை கேட்கும் கண்ணம்மாவால் ஜீரணித்து கொள்ளவே முடியவில்லை. இப்படியாக பலவித ட்விஸ்டுகளுடன் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இது ஒரு புறம் இருந்தாலும், இந்த சீரியல் இந்த அளவிற்கு வெற்றி அடைந்ததற்கு காரணம் இந்த சீரியலின் நடிகர் மற்றும் நடிகைகள் தான்.

விஜய் டிவி ‘பிக்பாஸ் சீசன் 5’ வாய்ப்பை தவறவிட்ட பிரபல சீரியல் நடிகை – ரசிகர்கள் ஷாக்!

குறிப்பாக இந்த சீரியலில் கதாநாயகன் அருண் மற்றும் கதாநாயகியாக நடித்து வரும் ரோஷினி இருவரும் ஆரம்பம் முதலே சிறப்பாக நடித்து வருகின்றனர். ரோஷினியின் நடிப்பு பலரையும் ஈர்த்துள்ளது என்று தான் கூற வேண்டும். ஆரம்பத்தில் கணவன் சொல்வதனை அப்படியே கேட்கும் அப்பாவி பெண்ணாகவும் பின்னர் தன்னை அதே கணவர் சந்தேகப்பட்டபோது கோபப்பட்டு அவரை எதிர்த்தது, தற்போது ஹேமா மற்றும் லட்சுமி இருவருக்கும் சரியான அம்மாவாக இருப்பது என்று அனைத்து சூழல்களிலும் சிறப்பாக நடித்து வருகிறார். இவர்கள் மட்டுமின்றி அம்மா, அப்பா, பாரதியின் தம்பி என்று அனைத்து நடிகர்களும் தங்களது நடிப்பு திறனை வெளிப்படுத்தி வருகின்றனர்.

நாகசைதன்யா, சமந்தா திருமண வாழ்க்கை முறிவு – கூட்டாக விவாகரத்து அறிவிப்பு!

இந்நிலையில், இந்த சீரியலில் நடித்து வரும் அனைவரின் சம்பள விவரங்களும் இணையத்தில் வெளியாகி உள்ளது. அதனை பார்த்து விட்டு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து வருகின்றனர் என்று தான் கூற வேண்டும். காரணம், அனைவருக்குமே அதிகப்படியான சம்பளம் தான்.

  • அருண் பிரசாத் (பாரதி) – ரூ.20,000
  • ரோஷினி (கண்ணம்மா) – ரூ. 20,000
  • ரூபஸ்ரீ (செளந்தர்யா) – ரூ.15,000
  • ரிஷி கேசவ் (வேணு) – ரூ.12,000
  • பரினா (வெண்பா) – ரூ.10,000
  • சுகேஷ் ராஜேந்திரன் (அகிலன்) – ரூ.10,000
  • கண்மணி (அஞ்சலி) – ரூ.9000
  • செந்தில்குமாரி (பாக்கியலட்சுமி) – ரூ.5000

மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து சம்பள விவரங்களும் இவர்கள் அனைவருக்கும் ஒரு எபிசோடிற்கு தரப்படுவதாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here