‘பாரதி கண்ணம்மா’ குடும்பத்துடன் இணைந்த ராஜா ராணி 2 பிரபலங்கள் – வைரலாகும் புகைப்படம்!

0
'பாரதி கண்ணம்மா' குடும்பத்துடன் இணைந்த ராஜா ராணி 2 பிரபலங்கள் - வைரலாகும் புகைப்படம்!
'பாரதி கண்ணம்மா' குடும்பத்துடன் இணைந்த ராஜா ராணி 2 பிரபலங்கள் - வைரலாகும் புகைப்படம்!
‘பாரதி கண்ணம்மா’ குடும்பத்துடன் இணைந்த ராஜா ராணி 2 பிரபலங்கள் – வைரலாகும் புகைப்படம்!

ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த ‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் முக்கிய தருணம் தற்போது ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இந்த பரபரப்புக்கு மத்தியில் பாரதி, கண்ணம்மாவுடன் ‘ராஜா ராணி’ நடிகை அர்ச்சனா இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாரதி கண்ணம்மா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் தற்போது முக்கியமான கதைக்களத்துக்கு நகர்ந்துள்ளது. இதுவரை, கிட்டத்தட்ட 8 ஆண்டுகளாக கண்ணம்மா மீது சந்தேகப்பட்டு அவரை விட்டு விலகி நிற்கும் பாரதிக்குள் ஒரு மனமாற்றம் நிகழ்ந்துள்ளது. பாரதியின் இந்த திடீர் மனமாற்றம் சௌந்தர்யா குடும்பத்தினருக்கு மட்டுமல்ல, ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் ரசிகர்களுக்கும் அதிர்ச்சியுடன் கூடிய சந்தோசம் தான்.

விஜய் டிவி ‘குக் வித் கோமாளி’ சீசன் 3 நவம்பர் மாதம் தொடக்கம்? ரசிகர்கள் உற்சாகம்!

ஏனென்றால் இந்த சீரியலில் பாரதி, கண்ணம்மா இருவரும் தோன்றும் காட்சிகள் அடிதடி, அதிரடியாக தான் இருந்து வந்தது. ஒரு கட்டத்தில் பாரதியும், கண்ணம்மாவும் இனி எப்போதும் சேரவே மாட்டார்கள் என்ற கணிப்புக்கு ரசிகர்கள் வந்துவிட்டனர். ஆனால் ரசிகர்களின் மனக்குமுறலை போக்கும் விதமாக ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் அடுத்தடுத்த கதை முடிச்சுகள் ஒவ்வொன்றாக அவிழ்ந்து கொண்டே வருகிறது. அந்த வகையில் கண்ணம்மாவை சமாதானம் செய்து வீட்டுக்கு அழைத்து வந்த பின்பு பாரதி, கண்ணம்மாவுக்கு இடையே நடைபெறும் செல்ல சண்டைகள் தான் அடுத்து வரும் கதைக்களமாக இருக்கப் போகிறது.

இது ஒரு பக்கத்தில் இருக்க ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் நடித்து வரும் நடிகை பரினாவுக்கு சமீபத்தில் சீமந்த விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் பிரபலங்கள், அருண், அகிலன், ரோஷினி, ஸ்வீட்டி ஆகியோருடன் ராஜா ராணி புகழ் அர்ச்சனா எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது. பொதுவாக விஜய் டிவியில் இருக்கும் நட்சத்திரங்கள் எல்லாருமே பெரும்பாலும் குடும்பம் போல பழக்கூடிய தன்மை கொண்டவர்கள்.

லட்சுமி அம்மாவை சீரியலில் இருந்து தூக்கிய ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குழுவினர் – ரசிகர்கள் அதிர்ச்சி!

அதனால் தான் ஒருவர் வீட்டில் விசேஷம் என்றால் மொத்த விஜய் டிவி நட்சத்திரங்களையும் ஒன்று சேர்த்து பார்க்க முடியும். அந்த வகையில் தான் பரினாவின் சீமந்த விழாவில் ‘ராஜா ராணி’ சீரியல் நடிகை அர்ச்சனா கலந்து கொண்டு விழாவை சிறப்பித்துள்ளார். இது தவிர பாரதி கண்ணம்மா மற்றும் ராஜா ராணி 2 உள்ளிட்ட 2 சீரியல்களையும் இயக்கி வருபவர் பிரவீன் பென்னட் என்பதால் இந்த சீரியல்களின் நடிகர்கள், நடிகைகளிடம் ஒற்றுமை எப்போதும் இருக்கும். அந்த வகையில் விஜய் டிவி பிரபலங்கள் இணைந்து எடுத்துக்கொண்ட இந்த புகைப்படம் தற்போது வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here