இந்தியாவில் ஏழை மக்களுக்கும் வங்கி சேவை – மத்திய அரசின் ஜன்தன் கணக்கு.. அமைச்சர் முக்கிய தகவல்!

0
இந்தியாவில் ஏழை மக்களுக்கும் வங்கி சேவை - மத்திய அரசின் ஜன்தன் கணக்கு.. அமைச்சர் முக்கிய தகவல்!
இந்தியாவில் ஏழை மக்களுக்கும் வங்கி சேவை - மத்திய அரசின் ஜன்தன் கணக்கு.. அமைச்சர் முக்கிய தகவல்!
இந்தியாவில் ஏழை மக்களுக்கும் வங்கி சேவை – மத்திய அரசின் ஜன்தன் கணக்கு.. அமைச்சர் முக்கிய தகவல்!

இந்தியாவில் ஏழை எளிய மக்களுக்கும் வங்கி கணக்குகள் இருக்க வேண்டும் என்ற நோக்குடன் பிரதமரால் ஜன் தன் கணக்கு என்ற திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் ஏராளமான மக்கள் பயனடைந்துள்ளனர். இந்த நிலையில் மத்திய அமைச்சர் ஜன்தன் கணக்கு குறித்த முக்கிய தகவலை வெளியிட்டார்.

ஜன்தன் கணக்கு:

இந்தியாவில் கடந்த 2014-ம் ஆண்டு ஜன்தன் கணக்கு என்ற திட்டத்தை பிரதமர் மோடி அவர்கள் கொண்டு வந்தார். இத்திட்டத்தின் கீழ் ஏழை மக்களுக்கு அவர்களின் குடும்பத்தினர்களுக்கும் காப்பீடு வசதியுடன் கூடிய வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டது. மேலும் இந்த கணக்கில் மத்திய, மாநில அரசின் நிதி உதவிகள் நேரடியாக வரவு வைக்கப்பட்டு வருகிறது. இதில் 18 வயதுக்கு மேற்பட்ட எந்த நபரும் ஜன்தன் கணக்கை தொடங்கலாம். இந்த ஜன்தன் கணக்கில் முக்கிய சலுகை என்னவெனில் நீங்கள் குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்க தேவையில்லை.

தமிழகத்தில் ‘டிரைவிங் லைசென்ஸ்’ நடைமுறையில் திடீர் மாற்றம் – குழப்பத்தில் பொதுமக்கள்!

Exams Daily Mobile App Download

அத்துடன் ஜன்தன் கணக்கு தொடங்குபவர்களுக்கு மற்ற வங்கிகளை போல ஏடிஎம் மற்றும் டெபிட் கார்டு போன்றவைகள் இலவசமாக வழங்கபடுகிறது. இந்திய மக்கள் மத்தியில் ஜன்தன் கணக்கு திட்டம் நல்லதொரு வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் நாட்டில் 75 டிஜிட்டல் வங்கி திறப்பு விழாவில் பேசிய மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் இதுவரை நாட்டில் 50 கோடி ஜன்தன் கணக்குகள் தொடங்கபட்டுள்ளதாகவும் இதில் பாதி பெண்களின் கணக்கு என்றும் தகவல் தெரிவித்துள்ளார்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

மேலும் இந்த கணக்குகள் வாயிலாக பயனாளிகளுக்கு நிதி அனுப்பப்பட்டு வருகிறது. இதுவரை நலத்திட்டங்களுக்காக மட்டும் 25 லட்சம் கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் மக்களின் ஜன்தன் வங்கிக் கணக்குளில் ரூ.1.75 லட்சம் கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர் நாட்டில் டிஜிட்டல் பேங்கிங் யூனிட்கள் திறமையான, காகிதமற்ற, பாதுகாப்பான சுழலை வழங்குகிறது என்றும் கூறியுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!