இன்று முதல் 4 நாட்கள் தொடர் வங்கி விடுமுறை – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
அக்டோபர் மாதத்திற்கான வங்கி விடுமுறை நாட்களில் இனி வரும் நாட்களில் உள்ள விடுமுறை பட்டியலை குறித்து இந்த பதிவில் காணலாம். இதனால் மக்கள் அதற்கு தகுந்தாற்போல வங்கி வேலைகளை பார்த்து கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
வங்கி விடுமுறை:
நாடு முழுவதும் உள்ள வங்கிகளுக்கான மாத வாரியான விடுமுறை நாட்களின் பட்டியலை முன்னதாக வெளியிட்டு விடுகிறது. அதன்படி, அக்டோபர் மாதத்தில் மொத்தம் 21 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. குறிப்பாக, வங்கி விடுமுறைகள் ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு மாறுபடும். இந்த விடுமுறை நாட்கள் அனைத்தும் எல்லா மாநிலங்களுக்கும் பொருந்தாது.
தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு – பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய உத்தரவு!
நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை, தனியார் துறை, வெளிநாட்டு வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் பிராந்திய வங்கிகள் உட்பட அனைத்து வங்கிகளும் இந்த அறிவிக்கப்பட்ட விடுமுறை நாட்களில் மூடப்பட்டிருக்கும். இதனால் பொதுமக்கள் விடுமுறை பட்டியலை சோதித்து தங்களது வங்கி பணிகளை திட்டமிட்டுக் கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள். விடுமுறை நாட்களில் ஆன்லைன் சேவைகளை பயன்படுத்திக் கொள்ளுமாறும் கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
விடுமுறை பட்டியல்:
- அக்டோபர் 22– வெள்ளிக்கிழமை ஈத்-இ-மீலாத்-உல்-நபி (ஜம்மு, ஸ்ரீநகர்)
- அக்டோபர் 23 – 4 வது சனிக்கிழமை
- அக்டோபர் 24 – ஞாயிறு
- அக்டோபர் 26 – சேர்க்கை நாள் (ஜம்மு, ஸ்ரீநகர்)
- அக்டோபர் 31 – ஞாயிறு