தமிழக வங்கிகளுக்கு 2 தொடர் விடுமுறைகள் – உண்மை நிலவரம் இது தான்!!
ஆகஸ்ட் மாதம் புதிதாக பிறந்துள்ள நிலையில் வங்கிகளுக்கு நடப்பு மாதத்தில் இரண்டு தொடர் விடுமுறைகள் வரை இருப்பதாக சமூக வலைதளங்களில் அதிக அளவில் தகவல்கள் பரவி வருகிறது. இது குறித்து வங்கி அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
வங்கி விடுமுறை:
மாதம் பிறந்த முதல் வாரத்தில் வங்கிகளுக்கான விடுமுறை நாட்கள் குறித்த தகவல்கள் அனைத்தும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருவது வழக்கமாக உள்ளது. நடப்பு ஆகஸ்ட் மாதத்தில் இரண்டு தொடர் விடுமுறைகள் வருவதாக சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவி வந்தது. அதன்படி ஆகஸ்ட் 12 முதல் 15 வரையும், ஆகஸ்ட் 25 முதல் 27ஆம் தேதி வரையும் தொடர் விடுமுறைகள் வர உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
Follow our Twitter Page for More Latest News Updates
ஆனால் இந்த தகவல்கள் அனைத்தும் போலியானது என்று வங்கி அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 12 மற்றும் 13ஆம் தேதி வாரத்தின் இறுதி நாட்கள் மற்றும் ஆகஸ்ட் 26 மற்றும் 27 வார இறுதி விடுமுறை நாட்கள் ஆகும். ஆனால் ஆகஸ்ட் 14ஆம் தேதி கிருஷ்ண ஜெயந்தி என்றும், ஆகஸ்ட் 25ஆம் தேதி வெள்ளிக்கிழமை விநாயகர் சதுர்த்தி என்றும் தவறான தகவல்கள் வெளியாகி உள்ளது.
ரூ. 1000 உரிமைத் தொகைக்கான முதற்கட்ட பணி முடிவு – ஆக.6 முதல் சார்பார்க்கும்பணி தொடக்கம்!
இந்த பண்டிகைகள் அனைத்தும் செப்டம்பர் மாதத்தில் வர உள்ள நிலையில் சமூக வலைத்தளங்களில் பரவும் போலியான தகவல்களை நம்ப வேண்டாம் என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுவதாக கூறியுள்ளனர்.