ஜூலை மாதத்தில் 17 நாட்களுக்கு வங்கிகள் அடைப்பு – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!

0
ஜூலை மாதத்தில் 17 நாட்களுக்கு வங்கிகள் அடைப்பு - வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
ஜூலை மாதத்தில் 17 நாட்களுக்கு வங்கிகள் அடைப்பு – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!

வரும் ஜூலை மாதத்தில் நாடு முழுவதும் உள்ள பொது மற்றும் தனியார் துறை வங்கிகள் அனைத்தும் கிட்டத்தட்ட 17 நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், வாடிக்கையாளர்கள் வங்கி தொடர்பான சேவைகளை விரைந்து நிறைவேற்றிக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வங்கி விடுமுறை

பொதுவாக ஒவ்வொரு ஆண்டு துவங்கும் போதும் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அந்த ஆண்டிற்கான வங்கி விடுமுறை பட்டியலை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு துவக்கத்தில் அறிவிக்கப்பட்டபடி, நாடு முழுவதும் உள்ள பொது மற்றும் தனியார் துறை வங்கிகள் அனைத்தும் அடுத்து வரும் ஜூலை மாதத்தில் கிட்டத்தட்ட 17 நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும். அதாவது, அனைத்து வங்கிகளும் ஞாயிற்றுக்கிழமைகள் தோறும் மூடப்பட்டிருக்கும். இது தவிர ஒவ்வொரு மாதமும் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் வங்கிகள் செயல்படாது.

இப்போது, மற்ற விடுமுறைகள் தினங்கள் அனைத்தும் மாநிலங்களுக்கு மாநிலம் வேறுபடும். ஏனென்றால் ஜூலை மாதத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல பிராந்திய திருவிழாக்கள் அனுசரிக்கப்படுகின்றன. எனவே, உள்ளூர் நாட்காட்டியின்படி பண்டிகை நாட்களில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள வங்கிகள் மூடப்பட்டிருக்கும். இதை கவனத்தில் கொண்டு வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கி தொடர்பான பணிகளை அதற்கேற்ப திட்டமிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இப்போது வங்கி விடுமுறை நாட்களில் இணைய வங்கி சேவைகள் தடையில்லாமல் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

வங்கி விடுமுறை பட்டியல்:

 • ஜூலை 1- ரத யாத்திரை (ஒடிசா)
 • ஜூலை 5 – குரு ஹர்கோவிந்த் ஜியின் பிறந்தநாள் (ஜம்மு & காஷ்மீர்)
 • ஜூலை 6 – MHIP நாள் (மிசோரம்)
 • ஜூலை 7 – கர்ச்சி பூஜை (திரிபுரா)
 • ஜூலை 9 – இத்-உல்-அதா (பக்ரித்)/ இரண்டாவது சனிக்கிழமை
 • ஜூலை 11 – ஈதுல் அஸ்ஹா
 • ஜூலை 13 – தியாகிகள் தினம் (ஜம்மு மற்றும் காஷ்மீர்)
 • ஜூலை 13 – பானு ஜெயந்தி (சிக்கிம்)
 • ஜூலை 14 – பென் டியன்க்லாம் (மேகாலயா)
 • ஜூலை 16 – ஹரேலா (உத்தரகாண்ட்)
 • ஜூலை 23 – நான்காவது சனிக்கிழமை
 • ஜூலை 26 – கேர் பூஜை (திரிபுரா)

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here