கோபியை விவாகரத்து செய்யும் பாக்கியா? வேறொருவருடன் திருமணம்? ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் ட்விஸ்ட்!
விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் கோபியின் உண்மை முகம் தெரிந்ததும் அவரை விவாகரத்து செய்யும் பாக்கியா பின்னர் வேறு ஒருவரை திருமணம் செய்வது போலவும் சில காட்சிகள் அரங்கேறலாம் என சொல்லப்பட்டு வருகிறது.
பாக்கியலட்சுமி சீரியல்
பொதுவாக விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் சீரியல்கள் பெரும்பாலும் வேறு மொழியில் இருந்து ரீமேக் செய்யப்படும் சீரியல்களாக தான் இருக்கும். அப்படி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் அடித்த பல சீரியல்கள் வேறு மொழியில் இருந்து ரீமேக் செய்யப்பட்டவை தான். அந்த வகையில் விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலும் பெங்காலி மொழியில் ஒளிபரப்பாகி வரும் ‘ஸ்ரீமோயி’ என்ற சீரியலை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருகிறது.
தமிழ் மொழியில் கிட்டத்தட்ட 350 எபிசோடுகளை கடந்திருக்கும் இந்த ‘பாக்கியலட்சுமி’ சீரியல் தற்போது ஒரு முக்கியமான கட்டத்தை எட்டியிருக்கிறது. அதாவது பாக்கியலட்சுமியின் கணவர் கோபி தனது குடும்பத்திற்கு தெரியாமல் பாலிய கால சிநேகிதி ராதிகாவுடன் பழகி வருகிறார். ஆனால் விதி, ராதிகாவை பாக்கியலட்சுமியின் நண்பராக கோபியின் குடும்பத்துடன் அறிமுகம் செய்து வைக்கிறது. இப்போது அந்த உண்மையை தெரிந்து கொண்ட கோபி இருவரையும் விலக்கி வைக்க பல திட்டங்களை தீட்டுகிறார்.
அனைத்திலும் தோல்வியை சந்தித்து வரும் கோபி எப்போது அவரது குடும்பத்தாரிடம் சிக்குவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். அந்த வகையில் இந்த வாரம் ஒளிபரப்பாக இருக்கும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் கோபி ராதிகாவுடன் இருப்பதை அவரது அப்பா பார்த்து விடுகிறார். இதற்கு பின்பாக கோபியின் அப்பா எடுக்கப்போகும் அதிரடி நடவடிக்கை என்ன என்பதை காணும் ஆர்வம் ரசிகர்களுக்கு மேலோங்கி இருக்கிறது.
விஜய் டிவி ‘பிக் பாஸ்’ வீட்டின் 4வது வார நாமினேஷன் ப்ராசஸ் – காத்திருந்த ட்விஸ்ட்! ரசிகர்கள் ஷாக்!
இந்நிலையில் பெங்காலி மொழியில் ஒளிபரப்பான ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் இது போன்ற எபிசோடுகளில் கோபி பற்றிய உண்மையை தெரிந்து கொண்ட பாக்கியா அவரை விவாகரத்து செய்வது போலவும், வேறு ஒருவரை திருமணம் செய்து கொள்வது போலவும் சில காட்சிகள் இடம்பிடித்துள்ளது. அதனால் தமிழில் ஒளிபரப்பாகும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலிலும் இது போன்ற கதைக்களம் அமைக்கப்படுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.