![புதிய சாதனை படைத்த ஜீ தமிழ் 'கோகுலத்தில் சீதை' சீரியல் - TRP ரேட்டிங்கில் முதலிடம்! ரசிகர்கள் வாழ்த்து! புதிய சாதனை படைத்த ஜீ தமிழ் 'கோகுலத்தில் சீதை' சீரியல் - TRP ரேட்டிங்கில் முதலிடம்! ரசிகர்கள் வாழ்த்து!](https://tamil.examsdaily.in/wp-content/uploads/2021/10/புதிய-சாதனை-படைத்த-ஜீ-தமிழ்-கோகுலத்தில்-சீதை.jpg)
புதிய சாதனை படைத்த ஜீ தமிழ் ‘கோகுலத்தில் சீதை’ சீரியல் – TRP ரேட்டிங்கில் முதலிடம்! ரசிகர்கள் வாழ்த்து!
ஜீ தமிழில் இந்த ஆண்டுக்கான 41வது வார TRP ரேட்டிங் பட்டியலில் மற்ற சீரியல்களை பின்னுக்கு தள்ளி கோகுலத்தில் சீதை சீரியல் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. இதனால் ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
கோகுலத்தில் சீதை:
தமிழ் சின்னத்திரையில் பல்வேறு சீரியல்கள் ஒளிபரப்பபட்டு வந்தாலும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற ஒரு சில சீரியல்கள் மட்டுமே TRP ரேட்டிங் டாப் பட்டியலில் இடம் பெறுகின்றனர். வழக்கமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களை விட தற்போது கோகுலத்தின் சீதை சீரியல் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. அதன்படி இதற்கு முன் ஜீ தமிழ் தொடர்கள் எடுத்த டிஆர்பி ரேட்டிங்கை விட கோகுலத்தில் சீதை அதிக டிஆர்பி ரேட்டிங் பெற்று ஜீ தமிழில் நம்பர்-1 மெகா தொடராக தேர்வாகியுள்ளது.
விஜய் டிவி ‘பிக் பாஸ்’ வீட்டின் 4வது வார நாமினேஷன் ப்ராசஸ் – காத்திருந்த ட்விஸ்ட்! ரசிகர்கள் ஷாக்!
தற்போது வரை, ஜீ தமிழ் சீரியல்களில் ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி, செம்பருத்தி மற்றும் சத்யா ஆகிய தோடர்கள் தான் முன்னணியில் இருந்து வந்தன. அதற்கு முன்னர், யாரடி நீ மோகினி தொடர்ச்சியாக முன்னணியில் இருந்தது. ஆனால், கோகுலத்தில் சீதை நெடுந்தொடர் டிஆர்பி ரேட்டிங்கில் மற்ற முன்னணி தொடர்களை எல்லாம் பின்னுக்கு தள்ளி புதிய சாதனையை படைத்து முதலிடத்தை பிடித்துள்ளது இந்த சீரியலில் ஹீரோவாக டான்ஸ் மாஸ்டர் நந்தா நடித்து வருகிறார். மேலும் நாயகியாக ஆஷா கவுடா நடித்து வருகிறார்.
F.R.I.E.N.D.S பிரபல நடிகர் ஜேம்ஸ் மைக்கேல் டைலர் மறைவு – ரசிகர்கள் இரங்கல்!
இந்த சீரியலின் கதை, அன்பு, குடும்பம் மற்றும் காதல் பின்னணியில் எடுக்கப்பட்டு வருகிறது. கதைப்படி நாயகி அன்பு பாசம் நிறைந்தவராகவும், திருமணம் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டவராகவும், பாரம்பரியத்தை காப்பாற்றும் பெண்ணாகவும் நடிக்கிறார். அதுமட்டுமின்றி வசுந்தரா நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பெண். நாயகன் அர்ஜுன் பணக்கார வீட்டு பையன். இருவரும் எப்படி திருமண பந்தத்தில் இணைய இருக்கிறார்கள் என்பதை இந்த சீரியல் கதையாக கொண்டுள்ளது.