‘பாக்கியலட்சுமி’ சீரியல் மயூவுடன் இணைந்த ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ லட்சுமி அம்மா – ரசிகர்கள் உற்சாகம்!
விஜய் டிவியின் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் இருந்து விலகி தற்போது ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் களமிறங்கி இருக்கும் நடிகை ஷீலா அந்த சீரியலின் குழந்தை நட்சத்திரம் மயூவுடன் இணைந்து எடுத்துக்கொண்ட ரீசன்ட் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
நடிகை ஷீலா
விஜய் டிவியின் சூப்பர் ஹிட் சீரியலான் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மூலம் மக்களின் நல் வரவேற்பை பெற்றிருந்தவர் நடிகை ஷீலா. சினிமாவை பின்புலமாக கொண்ட இவர் டிவி சீரியல்கள் மூலம் மக்களின் நாயகியாக மாறினார். இதுவரை பல்வேறு சின்னத்திரை சீரியல்களில் நடித்திருக்கும் நடிகை ஷீலாவுக்கு ரசிகர்களிடையே நல்ல பெயரை பெற்றுத்தந்தது ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் தான். இதில் 4 மகன்களுக்கு தாயாக வீல் சேரில் அமர்ந்தபடி நடித்திருக்கும் லட்சுமி கதாப்பாத்திரம் இன்றுவரை பேசப்பட்டு வருகிறது.
இரண்டாக உடையும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பம் – மீனாவை வம்பிழுக்கும் தனத்தின் அம்மா!
இப்படி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் சுமார் 600 எபிசோடுகளாக பயணித்து வந்த நடிகை ஷீலா சமீபத்தில் அந்த சீரியலில் இருந்து வெளியேறினார். இவரது திடீர் விலகல் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ரசிகர்ளுக்கு சற்று அதிர்ச்சியை கொடுத்திருந்தது. என்றாலும் தற்போது விஜய் டிவியில் தயாரிக்கப்பட்டு வரும் ‘வைதேகி காத்திருந்தாள்’ என்ற புதிய ப்ராஜக்ட் மூலம் ரசிகர்களை சந்திக்க இருப்பதாக அவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஒருவரும் எதிர்பாராத விதமாக நடிகை ஷீலா தற்போது ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் இணைந்துள்ளார்.
விஜய் டிவி ‘பிக் பாஸ்’ சீசன் 5ல் ரீஎன்ட்ரி கொடுக்கும் பாலாஜி முருகதாஸ்? அவரே செய்த ட்வீட்!
அதாவது ‘பாக்கியலட்சுமி’ தொடரில் ராதிகா என்ற கதாப்பாத்திரத்துக்கு அம்மாவாக நடிகை ஷீலா அறிமுகமாகி இருக்கிறார். இவரது கதாப்பாத்திரம் அந்த சீரியலில் திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இப்படி இருக்க ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் மயூ என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் குழந்தை நட்சத்திரம் ஷெரின், நடிகை ஷீலாவுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.