பாக்கியா ஸ்கூட்டி ஓட்டுவதை பார்த்து விடும் மாமனார்? செழியன் மீது கோபப்படும் கோபி!

0
பாக்கியா ஸ்கூட்டி ஓட்டுவதை பார்த்து விடும் மாமனார்? செழியன் மீது கோபப்படும் கோபி!
பாக்கியா ஸ்கூட்டி ஓட்டுவதை பார்த்து விடும் மாமனார்? செழியன் மீது கோபப்படும் கோபி!
பாக்கியா ஸ்கூட்டி ஓட்டுவதை பார்த்து விடும் மாமனார்? செழியன் மீது கோபப்படும் கோபி!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் “பாக்கியலட்சுமி” சீரியலில் இன்று கோபியின் நண்பர் சமையல் ஆர்டர் செய்யும் ஆள் குறித்து கேட்கிறார். வீட்டினர் அனைவரும் பாக்கியவை பற்றி கூறுமாறு கோபியை வற்புறுத்துகின்றனர்.

பாக்கியலட்சமி சீரியல்:

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில் இன்று கோபியின் நண்பர் சமையல் ஆர்டர் எடுத்து செய்யும் நபர் குறித்து விசாரிக்க சொல்லுகிறார். அப்போது கோபி விசாரித்து சொல்வதாக கூறுகிறார். அப்போது வீட்டினர் அனைவரும் பாக்கியவை பற்றி கூறுமாறு சொல்கின்றனர். இதனை மறுக்கும் கோபி, பாக்கியாவிற்கு வட நாட்டு சமையல் செய்ய தெரியாது என்று மறுத்து விடுகிறார். ஆனாலும், வீட்டினர் அனைவரும் பாக்கியாவிற்கு ஆதரவாக பேசுகின்றனர். பின் பாக்கியா, செழியன் மற்றும் ஜெனி இருவரும் சண்டையிட்டுக் கொண்டே இருப்பதாக கூறுகிறார்.

தமிழகத்தில் தீபாவளி சிறப்பு ரயில்கள் முன்பதிவு – தெற்கு ரயில்வே தகவல்!

கோபி பேசினால் இருவரது பிரச்சனையும் சரி ஆகி விடும் என்று கூறுகிறார். இதனால் கோபி எரிச்சல் அடைந்து விடுகிறார். பின், செழியன் பிளாட் வாங்கவில்லை என்று அனைவரும் கூறுகின்றனர். இதனால் ஆச்சரியம் அடையும் கோபி செழியனை திட்டுகிறார். நல்ல விலைக்கு பிளாட் வந்தால் அதனை வாங்க வேண்டியது தானே என்றும் கூறுகிறார்.

போகும் போது பாக்கியாவையும் திட்டி விட்டு செல்கிறார். பின், பாக்கியா காலை வெகு சீக்கிரமாக வேலைகளை முடித்து விட்டு டிரைவிங் ஸ்கூல் செல்ல திட்டமிடுகிறார். பாக்கியாவின் செயலை கவனிக்கும் கோபி ஏன் அவசரமாக வேலைகளை செய்ய வேண்டும் என்று கேட்கிறார். அதற்கு பாக்கியா மழுப்பலாக பதில் சொல்லி விட்டு பயிற்சி எடுக்க சென்று விடுகிறார். அங்கு பயிற்சியின் போது பாக்கியாவின் மாமனார் வந்து விடுகிறார்.

TN Job “FB  Group” Join Now

இதனால் பதட்டமடையும் பாக்கியா வண்டியை தவறாக ஓட்டுகிறார். ராதிகா வீட்டிற்கு அஸோஸியேஷன் மெம்பெர் என்று பக்கத்து வீட்டு பெண் ஒருவர் வருகிறார். ராதிகா அவருக்காக டீ போட சென்றதும் வந்த அந்த புதிய பெண்மணி மயூரியிடம் ராதிகாவின் கணவர் பற்றி விசாரிக்கிறார். இதனால் மயூரி எரிச்சலடைகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைந்து விடுகிறது.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!