விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியல் கோபி நிஜத்தில் யார்? ரசிகர்கள் அறியாத தகவல்கள்!

0
விஜய் டிவி
விஜய் டிவி "பாக்கியலட்சுமி" சீரியல் கோபி நிஜத்தில் யார்? ரசிகர்கள் அறியாத தகவல்கள்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியல் கோபி நிஜத்தில் யார்? ரசிகர்கள் அறியாத தகவல்கள்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் கதாநாயகன் மற்றும் வில்லன் என இரண்டு ரோல்களை ஒரே கதாபாத்திரத்தில் கொண்டு வந்து நடித்து வருபவர் நடிகர் சதீஸ். அவரை பற்றிய தெரியாத பல தகவல்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

பாக்கியலட்சுமி கோபி:

பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியா ஒரு அப்பாவி பெண்ணாக இருக்க, அவரது கணவர் கோபி நல்ல அப்பாவாகவும், நல்ல மகனாகவும், நல்ல மாமனாராகவும் இருக்கிறார். ஆனால் பாக்கியாவிற்கு மட்டும் நல்ல கணவராக இருப்பதில்லை. பாக்கியா படிக்கவில்லை என்பதால் அவரை கோபி வெறுத்து ஒதுக்குகிறார். இந்நிலையில் கோபி கதாபாத்திரத்தில் நடிகர் சதீஸ் நடித்து வருகிறார். சின்னத்திரையில் பிரபலமான முகமாக இருந்தாலும் கோபி கதாபாத்திரம் இவருக்கு தனி அந்தஸ்தை கொடுத்தது.

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் இனி பாக்கியாவாக வேறு நடிகை – ரசிகர்கள் ஷாக்!

அவர் 90 காலங்களிலேயே நடிப்பு துறைக்கு வந்தவர். பல படங்களில் நடித்து இருந்தாலும். ராமானுஜன் வாழ்க்கை வரலாறு, MGR உள்ளிட்ட படங்களில் அவர் நடித்தது தான் அவருக்கு தனி மரியாதையை கொடுத்தது. மேலும் அவர் சின்னத்திரையில் பல வெற்றி சீரியல்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். சூலம், கல்யாண பரிசு2, ஆனந்தம், திருமதி செல்வம், வம்சம், அன்னக்கொடியும் ஐந்து பெண்களும், ரங்கல விலாஸ், குலதெய்வம், பொன்னூஞ்சல் போன்ற சீரியல்களில் அவருடைய கதாபாத்திரத்திற்கு தனி ரசிகர்கள் இருந்தனர்.

மார்ச் 17 முதல் இரவு நேர முழு ஊரடங்கு அமல்? மாநில அரசு விளக்கம்!

ஆனால் இதுவரை அவருக்கு கிடைக்காத அந்தஸ்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் கோபி கதாபாத்திரம் கொடுத்துள்ளது. இந்த சீரியலில் கதாநாயகனும், வில்லனும் அவர் தான். கோபியாக நடிப்பதால் ஏகப்பட்ட மக்களின் நெகட்டிவ் கமெண்ட்களை பெற்றாலும் அதை எல்லாம் காதில் வாங்கி கொள்ளாமல் தன்னுடைய எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். மேலும் எப்போது கோபி மாட்டிக் கொள்வார் என்பது தான் சீரியல் பார்க்கும் ரசிகர்களின் ஒரே கேள்வியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!