“பாக்கியலட்சுமி” இனியாவிடம் பலமுறை கேட்ட ஒரே கேள்வி – கடுப்பாகி அவர் சொன்ன பதில்!

0
"பாக்கியலட்சுமி" இனியாவிடம் பலமுறை கேட்ட ஒரே கேள்வி - கடுப்பாகி அவர் சொன்ன பதில்!
“பாக்கியலட்சுமி” இனியாவிடம் பலமுறை கேட்ட ஒரே கேள்வி – கடுப்பாகி அவர் சொன்ன பதில்!

விஜய் டிவி பாக்கியலட்சுமி சீரியல் இனியா கதாபாத்திரத்தில் நடிக்கும் நேஹா மேனனிடம், ரசிகர்கள் பல முறை உடல் எடை பற்றி கேள்வி கேட்டதால் கடுப்பான அவர் தக்க பதிலடி கொடுத்திருக்கிறார்.

பாக்கியலட்சுமி:

பாக்கியலட்சுமி சீரியல் இல்லத்தரசிகளின் வாழ்க்கையை மையமாக கொண்ட கதை உடன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் பாக்கியா தான் முக்கிய கதாபாத்திரம் அவரது கணவராக கோபி மற்றும் அவர்களுக்கு மூன்று பிள்ளைகள் இருக்கின்றனர். முதல் மகன் செழியன், இரண்டாவது மகன் எழில், மூன்றாவது மகள் இனியா இருக்கின்றனர். இனியா கதாபாத்திரத்தில் நடிகை நேகா மேனன் பள்ளி மாணவியாக நடித்து வருகிறார்.

திருமணம் செய்வதாக ஏமாற்றி ‘பிக் பாஸ்’ ஜூலியிடம் பண மோசடி – காவல் நிலையத்தில் புகார்!

சின்னத்திரையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல சீரியல்களில் நடித்திருக்கிறார். பைரவி, பிள்ளை நிலா, நிறம் மாறாத பூக்கள், தமிழ்செல்வி என பல சீரியலில் நடித்திருக்கிறார். அதன் பின் சன் டிவி வாணி ராணி சீரியல் தான் அவருக்கு பெரிய புகழை கொடுத்தது. அதன் பின் ராதிகாவின் நடிப்பில் வெளியான சித்தி 2 சீரியலில் ராதிகாவின் மகளாக நடித்தார். இவர் சீரியல் மட்டுமல்லாமல் சினிமாவில் பல படங்களில் நடித்திருக்கிறார். 2016ஆம் ஆண்டு வெளியான நாரதன் என்ற படத்தில் நடித்தார்.

மேலும் சிபிராஜ் நடிப்பில் வெளியான ’ஜாக்சன் துரை’, ஆர்யா நடிப்பில் வந்த ‘யட்சன்’ போன்ற படங்களில் நடித்திருக்கிறார். மேலும், “தி எல்லோ பெஸ்டிவல்” என்ற குறும்படத்தில் நடித்ததற்கு அவருக்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டது. சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் பல போட்டோஷூட் புகைப்படங்கள், ரீல்ஸ் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். அப்போது ரசிகர் ஒருவர் உங்களது உடல் எடை எவ்வளவு என்று கேள்வி கேட்டதற்கு கோவமாக பதில் ஒன்றை அளித்துள்ளார்.

பாரதியை ‘மச்சான்’ என கூறி வெறுப்பேற்றும் ஆட்டோ ட்ரைவர் – ‘பாரதி கண்ணம்மா’ இன்றைய எபிசோடு!

அதில் “இதை தெரிந்து கொண்டு என்ன செய்யப் போகிறீர்கள். அது என்ன ஒரு அறிவா ? கிடையாது. இல்லை நீங்கள் என்னைப் பற்றி தெரிந்து கொள்ள விரும்பும் விஷயமா ? அப்படி என்றால் நீங்கள் என்னை பற்றி தெரிந்து கொள்ளவே வேண்டாம். இது போன்ற கேள்விகள் எழுப்படுவது முதல் முறை கிடையாது” என பதில் அனுப்பி இருக்கிறார் .

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here