எதிர்பாராத நேரத்தில் மரணத்தை தழுவிய ராமமூர்த்தி – கதிகலங்கி போன பாக்கியலட்சுமி குடும்பம்!

0
எதிர்பாராத நேரத்தில் மரணத்தை தழுவிய ராமமூர்த்தி - கதிகலங்கி போன பாக்கியலட்சுமி குடும்பம்!
எதிர்பாராத நேரத்தில் மரணத்தை தழுவிய ராமமூர்த்தி - கதிகலங்கி போன பாக்கியலட்சுமி குடும்பம்!
எதிர்பாராத நேரத்தில் மரணத்தை தழுவிய ராமமூர்த்தி – கதிகலங்கி போன பாக்கியலட்சுமி குடும்பம்!

தற்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக கோபியின் மீது பாக்கியாவிற்கு சந்தேகம் வர ஆரம்பித்திருக்கிறது. இந்நிலையில் யாருமே எதிர்பாராத நேரத்தில் கோபியின் அப்பாவான ராமமூர்த்தி இறக்கும்படியான ப்ரோமோ வெளியாகி அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது.

பாக்கியலட்சுமி:

விஜய் தொலைக்காட்சியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. பாக்கியாவை விவாகரத்து செய்து விட்டு ராதிகாவை திருமணம் செய்ய வேண்டும் என்கிற நோக்கில் கோபி அலைந்து கொண்டிருக்கிறார். நாளுக்கு நாள் கோபியின் மீது பாக்கியாவிற்கு சந்தேகம் வந்துவிடுகிறது. இரவு நேரங்களில் கூட கோபி, பாக்கியாவின் வீட்டிற்கு வராமல் ராதிகா வீட்டிலேயே தங்கிவிடுகிறார்.

பாரதி கண்ணம்மா சீரியலை பின்னுக்கு தள்ளிய பாக்கியலட்சுமி – ரசிகர்கள் ஆர்வம்!

மறுபுறம் ராதிகாவின் வீட்டிற்கு பாக்கியா அடிக்கடி வந்து செல்வதால் அந்த வீட்டையே மாற்ற கோபி திட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார். ஆனால் இந்த வீட்டை மாற்ற மயூ மற்றும் ராதிகாவிற்கு துளி கூட விருப்பம் இல்லை. இந்நிலையில் இனியாவை வீட்டிற்கு வருமாறு மயூ அழைக்கிறார். உடனே இனியா இங்கு வந்தால் உண்மைகள் அனைத்தும் தெரிந்துவிடும் என கோபி பயப்படுகிறார். ஏன் பாக்கியா குடும்பத்தினர்கள் குறித்து பேசினாலே கோபிக்கு பயம் வருகிறது என ராதிகாவுக்கு சந்தேகம் வருகிறது.

IPL T20 லீக்: சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் கவனத்திற்கு – அணியின் பலம் & பலவீனம் ஒரு பார்வை!

எப்போது தான் உண்மைகள் அனைத்தும் வெளியே வரும் என எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த சமயத்தில் பாக்கியா வீட்டில் ஒரு துக்க சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது கோபியின் அப்பாவான ராமமூர்த்தி திடீரென இறந்துவிடுகிறார். நாளுக்கு நாள் ராமமூர்த்தியின் உடலில் மாற்றங்கள் தெரிந்த நிலையில், திடீரென ராமமூர்த்தி இறந்தது அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது. இவரின் இறப்பிற்கு பிறகாவது கோபி திருந்துவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!